World Water Monitoring Day – புனித நதியை புனிதமாக்கியவர்

World Water Monitoring Day was established in 2003 by America’s Clean Water Foundation as a global educational outreach program that aims to build public awareness and involvement in protecting water resources around the world by empowering citizens to carry out basic monitoring of their local water bodies.

WWMD participants sampled their local lakes, streams, rivers, ponds, estuaries and other waterbodies for four key water quality indicators: dissolved oxygen (DO), pH, temperature and turbidity.

புனித நதியை புனிதமாக்கியவர்

sep18_Seecheval_1

பஞ்சாப் மாநிலத்தில் சுல்தான்பூர். அங்கு நடந்துள்ள ஒரு நிகழ்வு நம்மை வியக்க வைக்கிறது. சுல்தான்பூரின் மேற்கு பாகத்தில் சுமார் 160 கி.மீ. நீளமுள்ள காலிபெரி நதிக்கரையில் சீக்கிய குரு குருநானக் இறைதரிசனம் பெற்றார்.

புனிதமான காலிபெரி நதி கடந்த 40 வருடங்களாகச் சீரமைக்கப்படாமல் பல கிராமங்களிலிருந்து வரும் கழிவுநீரால் மாசுபட்டிருந்தது. நீரின் அமிலத்தன்மையால் நிலத்தடி நீர் மிகவும் கெட்டிருந்தது.

இந்த நிலையில் ஸீச்சேவால் என்ற சீக்கிய மத போதகர் அங்கு சென்றார். சீர்குலைந்திருந்த நம் நாட்டின் நிலையைக் கண்டு சுவாமி விவேகானந்தரைப் போன்று, இவரும் வீறுகொண்டெழுந்தார்.

சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களில் கழிவுநீர் நதியில் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பல முறை வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்கானது.

ஸீச்சேவால் ஒரு சமூக விழிப்புணர்வு இயக்கத்தைத் துவக்கினார். கிராமங்கள்தோறும் சென்று நதியை ஏன் சுத்தப்படுத்த வேண்டும் என்பதை விளக்கி வந்தார். கழிவுநீரை நதியில் கலக்காமல் வேறு வழிகளில் அப்புறப்படுத்துமாறு ஆலோசனை வழங்கினார்.
பஞ்சாப்பில் பல விவசாயிகள் நல்ல நீரைப் பயன்படுத்த விரும்பியதால் அவர்களின் விடாமுயற்சியின் பலனாக, அருகிலிருந்த ஒரு கால்வாய் நீரை நதியில் திருப்பிவிட அரசு ஆணை பிறப்பித்தது.

சீக்கிய மதத்தின் ஓர் அங்கமாகிய ‘கர்சேவா’ மற்றும் ‘தஸ்வந்த்’ (கோவிலுக்கு 10% காணிக்கை) ஆகியவற்றின் மூலம் ஸீச்சேவால் தன்னார்வத் தொண்டர்களை இணைத்து, நன்கொடைகளைத் திரட்டி நதியைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

உடனே 24 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அவருடன் இணைந்து செயல்பட்டனர். தொண்டர்கள் முதலில் நதியில் மிதந்து வந்த செடிகளை அகற்றினர். சேற்றை அப்புறப்படுத்தினர். கரைகளில் மரங்கள் நட்டனர். புதிதாகச் சாலைகள் அமைத்தனர்.

நதிப் படுகையைச் சுத்தப்படுத்தியதால் இயற்கை நீரூற்றுகள் மீண்டும் செயல்படத் துவங்கின. காலிபெரி நதியில் மீண்டும் நீர் நிரம்பி ஓட ஆரம்பித்தது. பண்டிகை தினங்களில் மக்கள் அங்கு நீராடுகிறார்கள்.

sep18_Seecheval_2

ஸீச்சேவால், தற்போது தோல்பதனிடும் தொழிற்சாலைகளையும் மற்ற தொழிற்கூடங்களையும் அணுகி, அவற்றின் கழிவுநீரை நதியில் கலக்காமல் சுத்தப்படுத்தும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளார். பிற நீர்நிலைகளையும் சீர்படுத்துவதற்குத் தேவையான தொழில் நுட்பத்துடன் ஸீச்சேவால் அரசுடன் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

சென்னையிலுள்ள கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் போன்றவற்றிற்கு இப்படி நம்முள் யாராவது செய்தால் நாமும் இந்த நதிக் கரைகளில் பிக்னிக் கொண்டாடலாம்.

அனைவரும் இணைந்து செயல்பட்டால் நம் நதிகளை முன்பு இருந்ததைப் போலவே புனிதமானவையாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்” என்றார் ஸீச்சேவால் என்ற பஞ்சாப் சிங்கம். இந்த வகையில் இவரும் சுவாமி விவேகானந்தரின் ஒரு சிங்கக்குட்டி அல்லவா!

sep18_Seecheval_3

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s