பரீட்சை என்ற எதிரியை ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?

கேள்வி: பரீட்சை என்ற எதிரியை ஜெயிக்க என்ன செய்ய வேண்டும்?
exam-fear
ஒரு குத்துச்சண்டை வீரனுக்கு, தன் எதிராளியின் மீது இனம் புரியாத பயம் இருந்தது. அதனால் அவனைப் பார்த்தாலே இவன் ‘மேடைக்கு வா, தொலைச்சிடுறேன்’ என்று கத்துவான். அப்படி கத்தும்போதெல்லாம் அவனுக்குச் சண்டையிட ஓரளவிற்கு ஊக்கம் கிடைத்ததாக நம்பினான்.

அன்றைய சண்டையில் எதிராளி இவனை வெறியுடன் தாக்கியபோது, இவனது ஊக்கமும் மூக்கும் உடைபட்டுப் போயின.
சில நாட்கள் கழித்து மீண்டும் புதுத்தெம்புடன் சண்டையிட்டான். புதுத் தெம்பு என்ன தெரியுமா? இவனுக்கு வேண்டியவர்களிடம் பணம் தந்து மேடைக்கு வெளியே உட்கார வைத்து இவனை ஊக்கப்படுத்த ஏற்பாடு செய்திருந்தான்.

நீண்ட நேரம் சண்டை நடந்தது. கை தட்டி, சீட்டியடித்து ஊக்கப்படுத்தி இவனது ரசிகர்கள் ஓய்ந்தார்கள். தலையிலும் காதுகளிலும் வாங்கிய குத்துகளிலும், சண்டையின் தீவிரத்திலும் இவனுக்கு அவர்கள் கத்தியது எதுவும் கேட்கவில்லை.

நடுவர் மூன்று முறை கையை அசைத்தும் இவனால் எழ முடியவில்லை. முடிவில் இவன் நாக் – அவுட் ஆகிவிட்டான். இப்படியே பலமுறை இவன் தோற்றான்.

ஏன் நமக்கு இந்தத் தோல்வி தொடர்கிறது? என்று இவன் யோசித்தான். மற்ற வீரர்கள் எப்படியெல்லாம் பயிற்சி செய்கிறார்கள் என்பதைக் கவனித்தான். அவர்களோடு பேசினான்.

முடிவில் தன் பயத்தை விட்டுப் பிரதான எதிரியிடமே சென்றான். இவனது ஆர்வத்தைக் கண்ட அவன், ஒரு சில ‘டிப்ஸ்’களைத் தந்தான். அவற்றை இவன் முறையாகப் பயின்றான்.

இப்போது இவனுக்கு எதிராளி மீது பயம் குறைய ஆரம்பித்தது; போட்டியில் வெல்ல வேண்டும் என்ற ஆர்வமும் அக்கறையும் மட்டுமே இருந்தது.

மீண்டும் போட்டி நடந்தது. எதிராளி மீதான கோபத்தையோ, சாதாரண ரசிகர்களின் கத்தலால் வரும் ஊக்கத்தையோ நம்பாமல், வேறு ஏதோ ஒன்று இவனிடத்தில் செயல்பட்டது. இவன் மிகவும் தீவிரமாகச் சண்டையிட்டான்.
என்ன ஆச்சரியம்! அன்றைய போட்டியில் இவன் ஜெயித்துவிட்டான்!

இப்போது இவன் ரசிகர்களைத் தேடி அலையவில்லை; அவர்கள் தாங்களாகவே வந்தார்கள். இவன் தன் சக்தியை நம்பினான்; வெளியிலிருந்து வரும் ஊக்கமெல்லாம் போதுமானதல்ல! நம்மிடம் அளவற்ற ஊக்கத்தை உற்பத்தி செய்து கொண்டால் எந்தப் போட்டியையும் வெல்ல முடியும் என்பதைப் புரிந்து கொண்டான்.

“நீதான் இந்தக் குத்துச் சண்டை வீரன். பரீட்சை என்பது எதிர் வீரன் (எதிரியல்ல) என்று யோசித்து இந்த உவமையைப் புரிந்து கொள்.

இன்று நீ படிக்கும் வகுப்பில் மட்டுமல்ல, வாழ்வில் எப்போதெல்லாம் பரீட்சை உனக்கு வருமோ, அப்போதெல்லாம் இந்த வீரன் வென்ற விதத்தை நினைவுகொள்.

‘எல்லா ஆற்றல்களும் உன்னுள்ளேயே உள்ளன. நீ எதையும் சாதிக்க முடியும்’ என்றல்லவா கூறுகிறார் சுவாமி விவேகானந்தர்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s