இறைசக்தியின் துணையுடன்…

மகான்கள் எப்படித் துன்பத்தைத் தாங்குகின்றனர்?

தவிர்க்க முடியாத வினைப்பயனை இறைசக்தியின் துணையுடன் – அந்த அருளை நம்பியே அனுபவித்துக் கழித்தவர் யாராவது உண்டா? உண்டு.

சுவாமி சண்டிகானந்தர்: மனதை உருக்கும் ‘ஜய ஜய ஜனனீ ஜெய ஸ்ரீசாரதாமணி’ போன்ற பாடல்களை இயற்றியவர் சுவாமி சண்டிகானந்தர். சுவாமிகளின் ஆழ்ந்த பக்தியின் வெளிப்பாடாக அமைந்த அவரது பாடல்கள் கேட்பவரிடம் ஆனந்தக் கண்ணீரை வரவழைக்கும்.

சுவாமிகளின் கடைசி சில ஆண்டுகள் சித்தபிரமையில் கழிந்தன. அவர் மிகவும் சிரமப்பட்ட நாட்கள் அவை. அதற்குக் காரணம் என்ன?

ஒருமுறை அன்னை ஸ்ரீசாரதாதேவியிடம் சுவாமி சண்டிகானந்தர், ‘அம்மா, இனி எனக்குப் பிறவி வேண்டாம், இந்தப் பிறவியிலேயே முக்தி வேண்டும்’ என்று மன்றாடினாராம்.
hm
அதற்கு அன்னை, ‘மகனே, உனக்கு இன்னும் சில பிறவிகள் பிறந்து கழிக்க வேண்டிய கர்மாக்கள் உள்ளனவே…?’ என்றாராம்.

சண்டிகானந்தர் திரும்பத் திரும்ப முக்தியையே வற்புறுத்திக் கேட்டார். அதற்கு அன்னை, ‘அப்படியானால் அந்தச் சில பிறவிகளுக்கான துன்பங்களை இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டியிருக்கும். அதற்காக நீ சிரமப்பட வேண்டியிருக்கும் மகனே…?’ என்றாராம்.

அப்போதும் சுவாமிகள் தம் கோரிக்கையை வலியுறுத்தினார். அன்னையின் அருளுடன் சுவாமிகள் பல பிறவிகளில் தான் கழிக்க வேண்டிய கர்மவினைகளை இந்தப் பிறவியிலேயே கழித்தார். அதற்காகத்தான் அவர் தமது இறுதிக்காலத்தில் பலவிதமான துன்பங்களை அனுபவித்தார். (சுவாமி விநாயகானந்தர் கூறியது).

எண்ணில் வினைகளைவா னெழிலாப்ப னூரானைப்
பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.
என்று திருஞானசம்பந்தர் பாடுகிறார்.

பல பிறவிகளின் கர்மபலனை, அன்னையின் அருளால் ஒரே பிறவியில் அனுபவிக்க முடியும் என்ற தைரியமும், திடவிசுவாசமும் சுவாமி சண்டிகானந்தரது பிறவித் தளையை அறுக்கும் வாளாகியது.

அன்னையையே முற்றிலும் சார்ந்திருந்த சுவாமிகளது மன ஓட்டம்தான் அவரது பாடல்களுக்கு அவ்வளவு உருக்கத்தைத் தந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s