அகண்டானந்தரின் இதயம்

அகண்டானந்தரின் இதயம்

எரோனி எனும் கிராமத்து ஜமீன்தார் ஓர் இஸ்லாமியர். அவர் சுவாமி அகண்டானந்தருக்கு ஒரு முறை கடிதம் எழுதினார்.

அதில் ‘எனது மருமகள் திடீரென்று இறந்துவிட்டாள். அவளது மறைவு என் இல்லத்தைப் பெரும் துயரில் ஆழ்த்திவிட்டது. ஆதலால், உங்கள் ஆசிரமத்திலிருந்து யாரேனும் என் இல்லத்திற்கு வந்து, இச்சமயத்தில் எங்களுக்கு ஆறுதல் அளித்தால் அது அமைதியை அளிக்கும்’ என்று எழுதியிருந்தார்.

அதைப் படித்த சுவாமி அகண்டானந்தர் மிகவும் நெகிழ்ந்து, தம் உதவியாளரிடம் அந்த இஸ்லாமிய ஜமீன்தாரைப் பற்றிக் கூறினார்:

“அவர் என்னை 40 வருடங்களுக்கு முன் ஒரே ஒருமுறை, 1897-இல் பஞ்சம் தலைவிரித்தாடிய சமயத்தில் பார்த்தார். ஆனால் இன்னமும் கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார். ஒருமுறை அவர் ‘நான் உங்கள் மீது தியானம் செய்கிறேன். இதனால் என் மனம் நல்ல சக்தி பெறுகிறது. அனைவருக்கும் சேவை புரியும் எண்ணமும் கூடுகிறது’ என்றார்.
swakh
“என்ன ஓர் ஆச்சரியமான பக்தர்!

“இங்கு வந்து என்னைப் பார்க்கவோ, என்னைத் தம்மிடத்திற்கு அழைப்பதோ இல்லை. ஆனால் ‘நான் பல காலம் முன்பு (பஞ்ச நிவாரண சமயத்தில்) பார்த்த அந்த இளந்துறவியின் திருவுருவம் என் மனதில் பதிந்துவிட்டது. அதுவே என் தியானத்திற்குரிய திருவுரு. ஆதலால் வயதான காலத்தில் தங்களைக் காண விரும்பவில்லை’ என அவர் எழுதினார்.”

இப்படி பிற மதத்தினருக்கும் தியான திருவுருவாகத் திகழ்ந்து வழிகாட்டிய சுவாமி அகண்டானந்தர் தமக்கு எதிரே குளிர்காலத்தில் வெறும் தரையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து ஒருமுறை கூறினார்:

“நீங்கள் குளிர்ந்த தரையில் அமர்ந்தால், என் உடல் நடுங்குகிறது. யார் காலிலாவது முள்குத்தினால் எனக்கு வலிக்கும். இப்படிப்பட்ட உணர்வு எனக்குப் பல வருடங்களாக உள்ளது” என்று கூறியதில் ஆச்சரியம் என்ன!

(சுவாமி அகண்டானந்தரின் ஜெயந்தி தினம் 12.10.15)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s