ஸ்ரீதேவி பாகவத ஸாரம்

ஸ்ரீதேவி பாகவத ஸாரம்

Kamala_2 copy

விஷ்ணு கூறியது-
தேவியே! உனக்கு நமஸ்காரம். பிரகிருதி யாகவும் உலகைப் படைப்பவளாகவுமிருக்கும் உனக்கு நமஸ்காரம். மங்கள வடிவினளும் ஆசைகளைப் பூர்த்தி செய்விப்பவளும் விருத்தியும் சித்தியும் அளிப்பவளுமாகிய உனக்கு நமஸ்காரம்.

தாயே! மதுகைடபர்களிடமிருந்து நாங்கள் காக்கப்பட்டோம். விரிந்து பரந்த உலகங்களெல்லாம் எங்களுக்குக் காட்டப்பட்டன. உன்னுடைய ஆலயத்தில் இன்பத்தின் எல்லை நிலத்தைக் கண்டோம். பவானி! உன்னுடைய தரிசனம் உயர்வற்ற உயர் நலமுடைய பெருமை வாய்ந்தது.

புத்திசாலிகளான மனிதர்களிடம் கல்வியாக நீயே விளங்ககுகிறாய் என்பது நிச்சயம். சக்திமான்களிடம் எப்பொழுதும் சக்தி வடிவில் உள்ளவள் நீயே. கீர்த்தி, அழகு, செல்வம், மாசற்ற சந்தோஷம், வைராக்கியம், முக்தி இவற்றின் வடிவாயும் இவைகளை அளிப்பவளாயும் மனித உலகில் விளங்குபவள் நீயே.

மகாவித்யா ஸ்வரூபிணியான தேவியே! உன்னுடைய பாதங்களில் பணிகின்றேன். மங்கள வடிவினளே! எல்லா மனோரதங்களையும் பூர்த்தி செய்விப்பவளே! எப்பொழுதும் எனக்கு ஞானப்பிரகாசத்தைத் தந்ததருள்வாயாக.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s