நவராத்திரி

நவராத்திரி

துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தேவிகளை வழிபடுவது நவராத்திரி ஆகும். ஸ்தூல சக்திகளைக் காட்டிலும் சூட்சும சக்திகள் முக்கியமாகக் கருதப்படுகின்றன.

Devi1

ஆதிபராசக்தியையே அதிசூட்சும மகாசக்தியாக நவராத்திரி நாட்களில் வணங்குகிறோம். ஞானசக்தியைக் கலைமகளாகவும், கிரியா சக்தியைத் திருமகள் என்றும், இச்சா சக்தியை மாகாளி என்றும் வழிபடுகிறோம்.

நவராத்திரியின் முதல் நாள் தேவியை பாலையாக பூஜிக்கிறோம். மது, கைடபர் என்ற அசுரர்களின் வதத்திற்குக் காரணமான தேவியை அபயம் என்கிறோம். அன்று தேவி நூல், ருத்ராட்ச மாலையுடன் காட்சி தருகிறாள்.

இரண்டாம் நாள் தேவி நவாக்ஷரி எனப்படுகிறாள். இன்று மகிஷாசுரனின் சேனைகளை விரட்டினாள். ஆதலால் ராஜராஜேஸ்வரியாக தேவியை அலங்கரிப்பார்கள். தேவியின் கையில் கரும்புவில், மலரம்பு, பாசாங்குசம் முதலியன இருக்கும்.

மூன்றாம் நாள் தேவி சூலம் ஏந்தி மகிஷத்தின் தலைமீது வீற்றிருப்பதாக அலங்கரித்து பஞ்ச தசாக்ஷரி யாகப் பூஜிக்கிறோம்.

நான்காம் நாள் ‘ஷோட சாக்ஷரி’. தேவியின் வெற்றிக் கோலம். சிங்கத்தின்மீது அமர்ந்து, தன்னை வணங்கும் தேவர்களுக்கும் முனி வர்களுக்கும் அருள்பவளாகக் காட்சி கொடுக்கிறாள். இந்தக் கோலத்தை ரோகிணி துர்க்கை என்றும் சொல்வர்.

ஐந்தாம் நாள் சதாக்ஷி. சும்பன் என்ற அசுரனின் தூதனான சுக்கிவன் சொல்வதைக் கேட்கும் கோலத்தில் காணப்படுகிறாள்.

ஆறாம் நாள் ‘சாகம்பரி’. தூம்ரலோசனன் என்ற அசுரனை வதைக்கும் தோற்றத்தில் சர்ப்பராஜா ஆசனத்தில் சண்டிகா தேவி கையில் ருத்ராட்ச மாலை, கபாலம், தாமரை, பொற் கலசம் ஆகியவைகளுடன் காட்சி தருகிறாள்.

ஏழாம் நாள் மஹாதுர்க்கையாக வீணை வாசிக்கும் கோலத்தில் காட்சி அளிக்கிறாள். ஒரு பாதத்தைத் தாமரையில் ஊன்றிக் கொண்டிருக்கிறாள். ‘சாம்பவி’ என்று பூஜிக்கப் படுகிறாள்.

எட்டாம் நாள் மகாலக்ஷ்மியாக வழிபடுகிறோம். கருணை நிறைந்த உருவத்துடன் அஷ்டலக்ஷ்மிகளுடன் கரும்புவில்லுடன் தேவி காட்சி அளிக்கிறாள்.

ஒன்பதாம் நாள் மஹா சரஸ்வதியாகப் பூஜிக்கப்படுகிறாள். வில், அங்குசம், பாணம், சூலம் ஆகியவற்றுடன் காட்சி தருகிறாள். இவ் வடிவத்தை காமேஸ்வரி என்றும் கூறுவர்.
பத்தாம் நாள் சிவசக்தி யாக ஆராதிக்கப்படுகிறாள். அதுவே வெற்றியைத் தந்த நாள் என்பதால் ‘விஜயதசமி’ என்கிறோம்.

மஹாளயத்தில் பித்ருக்களை வழிபடுகிறோம். இவர்களை கிருஷ்ண பட்சத்தில் வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்யர்கள் என ஆராதனை செய்கிறோம்.

பித்ருக்களைத் தவிர மற்ற தேவதைகளுக்காகப் புரட்டாசி மாதம் சுக்ல பட்சத்தில் நவராத்திரி கொண்டாடுகிறோம். இதில் சக்தி தேவதை யையே பிரதானமாக உபாசிக்கிறோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s