அம்மன் கொலு

அம்மன் கொலு

கலைகளை வளர்ப்பதால் நவராத்திரியைக் கலைத் திருநாள் என்கிறோம். வீடுகளிலும் கோவில்களிலும் கொலு வைக்கிறோம். இந்த ஒன்பது நாட்களும் பெண்கள் வீட்டை அலங்கரிப்பதும், வீட்டிற்கு வந்தவர்களை மஞ்சள், குங்குமம் அளித்து உபசரிப்பதும் நவராத்திரியின் முக்கிய அம்சமாகும்.

அறியாமையை வென்று அறிவைப் பரப்புவதற்கும் தீமையை அழித்து நல்லது செய்வதற்குமே விழாக்கள் நடைபெறுகின்றன. அசுரனைத் தேவி அழித்து எல்லோரையும் காத்ததால் அம்மன் கொலு என்கிறோம்.

இதை பொம்மைக் கொலு என்றும் கூறுவர்.

kolu

கொலுவில் அன்றாட வாழ்வுக்குத் தேவையான அரிசி, பருப்பு, பாத்திரம் போன்றவை கீழே உள்ள மூன்று படிகளில் வைக்க வேண்டும். இது தாமச குணத்தைக் குறிக்கிறது.

அடுத்த மூன்று படிகளில் நாட்டைக் காக்கும் தலைவர்கள், அரசர், ராணி, மந்திரி, வேலையாட்கள், விலங்கு பொம்மைகள் போன்றவை வைக்கப்படும். இது ரஜோ குணத்தைக் காட்டுகிறது.

மற்ற மூன்று படிகளிலும் தெய்வ உருவங்களையும், மரப்பாச்சி பொம்மைகளையும் வைத்து கலசத்தையும் வைப்பார்கள். இது சத்துவ குணத்தை அடையும் வழி என்பதை நமக்குக் காட்டுகிறது. படைப்பின் முதல் கட்டத்திலிருந்து தெய்வங்கள்வரை கீழ்படியிலிருந்து மேல் படிவரை கிரமமாக வைப்பார்கள்.

சைவர்கள், வைணவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோராலும் கொண்டாடப்படும் பண்டிகை நவராத்திரி.

சிவனுடன் இருக்கும்போது பார்வதி யாகவும், தீயவர்களை அழிக்கும்போது காளியாகவும், துர்க்கையாகவும் மாறுகிறாள் தேவி.

நமக்கு எல்லா ஐஸ்வரியத்தையும் தருவதற்காக லக்ஷ்மியாகவும், அறிவு புகட்ட சரஸ்வதியாகவும் வருகிறாள். மூன்று தொழிலையும் செய்பவள் தேவியே.
தாய்தானே முதல் தெய்வம். சிவனையும் அம்மையப்பன் என்றே வணங்குகிறோம். மகா லக்ஷ்மியோடு இருக்கும் நாராயணனையே அதிகம் வழிபடுகிறோம். ஆதலால் சக்தியே முக்கியத்துவம் பெறுகிறாள்.

சித்திரை மாதமும், ஐப்பசி மாதமும் யமனுடைய இரண்டு நச்சுப் பற்கள் என்று வியாசர் கூறுகிறார். இதனால் இந்த இரண்டு மாதங்களிலும் பல நோய்கள் வரும். சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரி கொண்டாடுகிறோம். ஐப்பசி மாதத்தில் தேவி பூஜை செய்து விஷ வியாதிகள் வராமல் தடுக்க தேவியை எல்லோரும் வழிபடுவோமாக!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s