மூர்த்த மஹேஸ்வர கீதி ஸ்தோத்ரம்

மூர்த்த மஹேஸ்வர கீதி ஸ்தோத்ரம்

மூர்த்த மஹேச்வர முஜ்வல பாஸ்கர மிஷ்டமமர நர வந்த்யம்|
வந்தே வேத தனுமுஜ்ஜித கர்ஹித காஞ்சன காமினி பந்தம்||
கோடி பானுகர தீப்தசிம்ஹ மஹோ கடி தட கௌபீன வந்தம்|
அபிரபி ஹுங்கார நாதித திங்முக ப்ரசண்ட தாண்டவ ந்ருத்யம்||
புக்தி முக்தி க்ருபா கடாக்ஷ ப்ரேக்ஷண மக தல விதலன தக்ஷம்|
பாலசந்த்ர தரமிந்து வந்த்யமிஹ நௌமி குரு விவேகானந்தம்||

Swamiji art4

எனது ஆன்மிக குரு, எனது பிரார்த்தனையின் குறிக்கோள், சிவனின் அவதாரம், ஆதவனைப் போன்ற ஒளியுடையவர், மனிதர்களாலும் தேவர்களாலும் புகழப்படுபவர், வேதத்தின் சாரம், காம, காஞ்சன ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர், மனிதர்களுள் சிங்கத்தைப் போன்றவர், கோடி சூரியனின் பிரகாசத்தை உடையவர், சந்நியாசியின் கௌபீனத்தைத் தவிர வேறு ஓர் உடைமையும் இல்லாதவர், நான்கு திசையும் பரமசிவனின் தாண்டவ நடனம் ஆடிக் கொண்டு வையமெல்லாம் ‘அச்சம் தவிர்’, ‘அச்சம் தவிர்’ என்ற அறைகூவலை முழங்கிக் கொண்டிருப்பவர், ஒரே பார்வையினால் மோக்ஷத்தையும், ஆனந்தத்தையும் அளிக்க வல்லவர், தீமைகளையும் பிரபஞ்சத்தின் தீயசக்திகளையும் தம் பாதங்களின் கீழ் நசுக்கிப் புதைப்பவர், அர்த்த சந்திர உருவத்தை நெற்றியில் தாங்கி அருள் புரியும் பரமசிவனின் மறு உருவானவர், இந்து*வால் பூஜிக்கப்படுபவர் – இப்படிப்பட்ட சுவாமி விவேகானந்தருக்கு எனது நமஸ்காரங்கள்.
* இந்தக் கவிதையை இயற்றிய சரத் சந்திர சக்ரவர்த்தியின் புனைப் பெயர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s