தீபாவளி – புது விளக்கம்

தீபாவளி – புது விளக்கம்

நம் எல்லோராலும் கொண்டாடப் பெறும் தீபாவளியானது பூமாதாவுடன் தொடர்புடையது பண்டிகை ஆகும்.

நாம் உட்கொள்ளும் உணவு பூமாதா இட்ட பிக்ஷை. பூமியிலிருந்து நேரடியாகக் கிடைக்கும் ஆகாரம் சைவ உணவே ஆகும். அதை உட்கொண்டுதான் பெரும்பாலான விலங்குகள் வாழ்கின்றன. ஆகவே அசைவ உணவிற்கும் பூமியே காரணமாகிறது.

நாம் உட்கொள்ளும் உணவுதான் நம் வாழ்க்கையாக அமைகிறது. இது உபநிடதங்களின் ஆராய்ச்சி.
பூமியிலிருந்து வரும் உணவுப் பொருள் களின் தன்மைகளைப் பொறுத்து அவற்றை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம்.

1. பக்ஷ்யம் (கடித்தல்- முறுக்கு, சீடை முதலியவை), 2.போஜ்யம் (மென்று விழுங் குதல்- அன்னம் முதலியன), 3.சோஷ்யம் (உறிஞ்சிச் சாப்பிடுதல் – பழரசம் போன் றவை), 4.லேஹ்யம் (நக்குதல் – தேன், பஞ் சாமிர்தம் போன்றவை), 5. பேயம் (குடித்தல் – பால், நீர் முதலியன) .
– பாவனோபநிஷத்-20

நம் உடலில் பல அவயவங்கள் இருக்கின்றன. அவற்றுள் கண், காது, நாக்கு ஆகியவை முறையே அக்கினி, ஆகாசம், நீர் ஆகியவற்றிலிருந்து உண்டானவை.

கண்கள் அக்கினியைச் சேர்ந்தவை. ஆகையால்தான் கண்கள் தொடர்ந்து பார்த்தால் அவை எரிகின்றன. நாக்கு நீருக்குச் சேர்ந்தது. ஆதலால் அது எப்போதும் ஈரமாக இருக்கிறது. இதுபோல உடலின் பல பகுதிகள் பலவிதமானவை. ஒவ்வொன்றும் தனக்கு வேண்டிய உணவின் ரசத்தை மட்டுமே ஏற்கிறது.

நாமோ பலவிதமான உணவுப் பொருள்களை உட்கொள்கிறோம். அவைகளைப் பிரித்துத் தருவது வயிற்றிலுள்ள ஜாடராக்னி ஆகும். அதை வைசுவானர அக்கினி என்று மறைகள் கூறுகின்றன. அது நாம் உட்கொள்ளும் உணவைப் பதப்படுத்திச் சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு சக்கையை வெளியேற்றுகிறது.

உள் உறுப்புகள் உணவின் நுண்சத்தை உட்கிரகித்து அவற்றை மனம், வாக்கு, பிராணன் ஆகியவற்றிற்கு அனுப்புகின்றன. மிச்சமுள்ள ஆகாரம் நீருடன் கலக்கப்பட்டு ரத்தத்தின் வழியே சŽரம் முழுவதும் ‘கன்வேயர் பெல்டில்’ இடப்பட்ட பொருள் போல் சுற்றிக் கொண்டே வருகிறது. சŽரத்தின் மற்ற உட்பகுதிகள் தங்களுக்குத் தேவையான சத்துப் பொருளை மட்டும் எடுத்துக் கொள்கிறது.

நமக்குத் தலைவலியோ, கால்வலியோ வந்தால் மருந்து, மாத்திரை ஆகியவற்றை உட் கொள்கிறோம். அந்த மருந்தின் சாரம் இவ்விதத்தில்தான் நோய்வாய்ப் பட்ட பகுதிக்குச் செல்கிறது. இந்த ‘கன்வேயர் பெல்ட் டுக்கு’ வியானன் என்று பெயர்.

சில சமயம் நாம் அறியாமல் நம் சŽரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் ஒவ்வாத உணவை உண்டு விடுகிறோம். வைசு வானர அக்கினி யானது உதானம் என்னும் காற்றின் உதவி கொண்டு அதை நம் உடலிலிருந்து வாந்தி எடுக்கச் செய்கிறது.

இவைகளெல்லாம் நமக்குத் தெரிந்தவைதான். ஆனால் பெரியோர்கள் இந்தத் தத்துவத்தையே தீபாவளியாக அமைத்திருக்கிறார்கள்.

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் வைசுவானர அக்கினி எனக் கருதப்படுகிறார். அவர் கீதையில் ‘நான் உயிர்களின் உடலில் வைசுவானர அக்கினியாக இருந்து கொண்டு பிராணன் மற்றும் அபானனுடன் கூடி நான்கு விதமான உணவை ஜீரணம் செய்கிறேன்’ (கீதை 15:14) என்று கூறியுள்ளார்.

நல்ல உணவுப் பொருள்கள் கிடைப்பது போலவே பூமியிலிருந்து ஒவ்வாத உணவும் உண்டாகிறது. ஒவ்வாத உணவாக நரகாசுரன் என்னும் அரக்கன் உவமானமாகக் கூறப்பட்டுள்ளான்.
(இவைகள் பத்ம புராணம் இரண்டாம் காண்டத்திலும், சாந்தோக்கிய உபநிஷதம் ஆறாம் அத்தியாயத்திலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன.)

மகாவிஷ்ணு, வராக அவதாரத்தில் பூதேவியை மணந்து கொண்ட போது அவர்கள் இருவருக்கும் நரகாசுரன் பிறந்தான்.
துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சத்தியபாமாவை மணந்திருந்தார். சத்தியபாமா பூதேவியின் அவதாரம்.
ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரனின் கொடுமைகளை அறிந்து அவனை வதைக்க முடிவெடுத்தார். ஒரு தர்ம யுத்தத்திற்கு சத் தியபாமாவின் உதவியை வேண்டினார் அவர். அவளும் சம்மதித்தாள்.

ஒரு தாய், உலகம் உய்ய வேண்டி அரக்கனான தன் மகன் இறக்க வேண்டியவனே என்று தீர்மானித்தாள். அதோடு மட்டுமல்லாமல் தன் கண்ணெதிரே அவன் மடிவதையும் பார்த்தாள். அந்த வரலாறே தீபாவளி ஆனது.
இது தர்ம நீதி – அறத்தின் அறைகூவல்.

ஸ்ரீகிருஷ்ணர் நரகாசுரனை உலகிலிருந்து பிரித்துவிட்டார். அவர் நம் உடலில் வைசு வானர அக்கினியாக இருந்து ஒவ்வாத உணவு சேராமல் தடுப்பது போல, உலகிற்கு ஒவ்வாத அரக்கர்களையும் வதைத்துவிடுகிறார்.

தேவாசுர யுத்தம் எப்போதோ நடந்து முடிந்த ஒன்றல்ல. அது இப்போதும் நம் மனதில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
deepam

நம் மனம் என்பது ஒரு யுத்த பூமி. அதில் நல்ல எண்ணங்கள் தேவர்கள், தீய எண்ணங்கள் அரக்கர்கள். சில சமயம் கொடிய எண்ணம் வலிமை பெற்றதாகத் தோன்றும்.
கீழான, வலுவான எண்ணமே நரகாசுரன். அவனை அழித்தது ஸ்ரீகிருஷ்ணன் என்னும் மேலான சிந்தனையே.

தீய எண்ணத்தை அழிக்க வேண்டும் என்ற அறிவு – அந்த அறிவுச்சுடரின் சின்னமாக – தீபம் ஏற்றப்படுகிறது.
அநேக நற்சிந்தனைகள், அநேக தீபச் சுடர்கள் போன்றவை. காரி ருட்டை அல்லது தீய எண்ணத்தைப் போக்க வலிமையுடையது அறிவுச்சுடரே. தீபாவளி என்றால் அக்ஞான இருளை – ஆணவ இருளை அகற்றக்கூடியது என்று அர்த்தமாகிறது. தீபங்களின் வரிசை தான் தீபாவளி ஆனது.

தீய எண்ணங்களை நீக்கத் தூய அறிவு தேவை. அதற்கு பக்தியும் சிரத்தையும் கொண்டு, பெரியோர்களின் ஆசியுடன் நல்ல ஒழுக்கங்கள் வளர தீபாவளி அமைக்கப்பட்டுள்ளது.

தீபாவளியன்று இனிப்புப் பலகாரங்கள் முதலிய வைகள் உண்பதும் மற்றவர்களுக்கு அளிப்பதும், பூ தேவியின் புகழைப் பரப்பவும், அவளுக்கு நன்றி தெரி விக்கவும்தான். பூமாதேவி நம்மைப் பெற்றெடுக்கிறாள்; உணவளித்துக் காக்கிறாள்; நம்மிடமுள்ள அசுர குணத்தை அழிக்கிறாள்.

புது ஆடைகளும், புனித மங்கள ஸ்நானமும் நமக்குப் புது சங்கல்பத்தை உருவாக்கிக் கொள்ள உதவுகிறது. புது சங்கல்பம் புது வருடம் போல அமைகிறது. ஆகையால் சிலர் தீபாவளியையே புது வருடப்பிறப் பாகக் கொண்டாடுகிறார்கள்.

நாமும் தீபாவளியன்று புது சங்கல் பங்களை மேற்கொண்டு பூமியன்னைக்கு நம்முடைய நன்றியை உரித்தாக்குவோமாக!

One response to “தீபாவளி – புது விளக்கம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s