சண்முக கவசம்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் கி.பி. 1923-இல் டிசம்பர் மாதம் 27-ஆம் தேதி காலை பத்துமணிக்கு சென்னை, தம்புச்செட்டித் தெருவில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வடக்கிலிருந்து வெகு வேகமாக ஓடி வந்த ஒரு பெரிய குதிரை சுவாமிகள் மீது மோதியது. அவர் கீழே விழுந்தார். வண்டியின் சக்கரம் அவரது இடது காலில் ஏறியதில் கால் எலும்பு முறிந்தது.

உடனே அவர் அரசுப் பொதுமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு மன்றோ வார்டில் (11-ஆம் அறை) சேர்க்கப்பட்டார்.

அக்காலத்து ஆங்கில மருத்துவர் ஒருவர் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தார். சுவாமிகள் முதிர்ந்த 73 வயதுடையவராகவும் உப்பு நீக்கி உணவு கொள்ளும் நியமம் உடையவராகவும் இருந்ததால் முறிந்த காலைக் குணமாக்க இயலாது என மருத்துவர் கை விரித்தார்.

சுவாமிகள் சண்முகனை நினைத்து, சண்முகா! நீயே அடியாரின் உயிருக்கும் உடம்புக்கும் கவசமாக இருப்பாய் என உறுதியாக நம்பிச் சண்முக கவசம் பாடினேன். இப்போது கவசம் பாடிய என் காலையே நீ காப்பாற்றாது போனால் அடியார்க்கு உன் மீது எப்படி நம்பிக்கை உண்டாகும்?

என் கால் போனால் போகட்டும். என் தூல உடம்பை விட்டு உன்னுடன் கலக்கவே நான் ஆசைப்படுகிறேன். அதற்கு இது நல்ல வாய்ப்பு என்று ஆனந்தப்படுகிறேன். ஆனால் அடியாரை நீ கவசமாக இருந்து காக்க
மாட்டாய் என இழிவாகக் கூறி உன் மீது நம்பிக்கை கொள்ள மாட்டார்களே. அந்த இழிவு என்னால் உனக்கு ஏற்படலாமா? அதை எவ்வாறு தடுப்பேன்” என்று சொல்லி அழுதார்.

சுவாமிகளின் வருத்தத்தை நீக்க முருகன், மருத்துவமனையில் சேர்ந்த 11-ஆம் நாள் இரண்டு மயில்கள் நடனம் ஆடிவரும் காட்சியைச் சுவாமிகளுக்கு அளித்து அருளினான்.

பின் முருகன் ஒரு குழந்தையாக வந்து அவர் படுக்கையில் அவர் அருகில் கால் நீட்டிப் படுத்து மறைந்தருளினான்.
இவ்விரு காட்சிகளுக்குப் பிறகு மருத்துவர் சுவாமிகளின் காலை மீண்டும் எக்ஸ்-ரே எடுத்துப் பார்த்தபோது முறிந்த கால் பூரண குணமாகி இருந்தது.

இது ஓர் அதிசயம் என்று மருத்துவமனையில் இருந்த ஆங்கிலேயர்கள், கிறிஸ்தவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களும் சுவாமிகளிடம் திருநீறு பெற்றுப் பூசிக் கொண்டார்கள்.

One response to “சண்முக கவசம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s