அற்புத குரு அற்புத சீடர்

அற்புத குரு அற்புத சீடர்

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தமது சீடர்களைக் கவர்ந்த விதம் ஒவ்வொன்றும் அலாதியானது. நினைத்துப் பார்த்தால் நெஞ்சம் இனிக்கும். பிறருக்குச் சொல்லிப் பார்த்தால் காதில் தேன் பாயும்.

1884, ஆகஸ்ட் 18. ஸ்ரீராமகிருஷ்ண ஜெயந்தி அன்று ஹரிபிரசன்னா என்ற சீடர் (சுவாமி விஞ்ஞானானந்தர்) குருதேவரைத் தரிசிக்கச் சென்றார். அதை அவரே கூறுகிறார்:
குருதேவர் எனக்குத் தேவியின் பிரசாதங்களைச் சாப்பிடக் கொடுத்தார். அன்றிரவு நான் அங்கேயே தங்க விரும்பினேன். குருதேவர் எனக்குப் படுக்கையை விரித்ததுடன் கொசு
வலையும் கட்டித் தந்தார். படுத்ததும் நான் உறங்கிப்போனேன்.
நள்ளிரவில் விழித்துப் பார்த்தபோது அவர் என் படுக்கையைச் சுற்றியபடியே அரையுணர்வு நிலையில் ‘அம்மா, அம்மா’ என்று தேவியின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அன்றிரவு குருதேவர் என்னை ஆசீர்வதித்து அருளினார்.”

சீடர்களின் நலனில் குருதேவர் அதிக அக்கறை காட்டினார். சிறிது நாட்கள் யாராவது அவரைப் பார்க்க வராவிட்டால் வருவோர் போவோரிடமெல்லாம் விசாரிக்க ஆரம்பித்து
விடுவார்.

ஒருமுறை ஹரி பிரசன்னா நீண்ட நாட்களாக தட்சிணேசுவரம் செல்லவில்லை. குருதேவர் ஆள் அனுப்பி அவரை வரவழைத்து அவரிடம், நீ ஏன் இத்தனை நாட்களாக வரவில்லை?” என்று கேட்டார்.

அதற்கு ஹரிபிரசன்னா, ஐயா, எனக்கு வர வேண்டும் என்று தோன்றவில்லை. தியானம் செய்ய முயன்றேன், அதுவும் முடியவில்லை” என்றார்.
swvijn
உடனே குருதேவர், என்ன! உன்னால் தியானம் செய்ய முடியவில்லையா?” என்று கேட்டார். சிறிது நேரம் மௌனமாக இருந்த குருதேவர் அவரைத் தமக்கு அருகில் வரச் சொன்னார். ஹரிபிரசன்னரே அன்று என்ன நடந்தது என்று விளக்குகிறார்:
“குருதேவரை நான் நெருங்கினேன். அவர் தமது கையால் எனது நாக்கில் எதையோ வரைந்தார். என் உடல் நடுங்கியது. எனக்குள் ஒருவகையான ஆனந்தம் பொங்கிப் பெருகியது. பிறகு அவர் என்னிடம், ‘பஞ்சவடிக்குச் சென்று தியானம் செய்’ என்று கூறினார். அவர் சொன்னபடியே நான் பஞ்சவடிக்குச் சென்று தியானத்தில் அமர்ந்தேன். என்னால் நடக்க முடியவில்லை. கால்கள் தடுமாறின. குருதேவரின் ஸ்பரிசம் எனக்குள் உண்டாக்கிய ஆன்மிகப் போதையில் இருந்த நான் தட்டுத் தடுமாறிச் சென்று ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்தேன்.

சிறிது நேரத்தில் புறவுலக நினைவை முற்றிலும் இழந்து தியானத்தில் ஒன்றிவிட்டேன். மீண்டும் நான் சாதாரண உணர்வு நிலைக்கு வந்தபோது குருதேவர் என் முன் உட்கார்ந்திருந்தார். அவர் சிரித்தபடி தம் கைகளால் என் உடலை அன்புடன் தடவிக் கொடுத்தார்.அந்தப் புன்னகையில் ஆழ்ந்த அர்த்தம் இருந்தது. நான் இன்னும் அதே பரவச நிலையில் இருந்தேன்.

குருதேவர் என்னிடம், ‘நல்லது, உனது தியானம் எப்படி அமைந்தது?’ என்று கேட்டார். ‘மிகவும் நன்றாக’ என்றேன்.
பிறகு குருதேவர், ‘இன்று முதல் உனக்கு எப்போதும் ஆழ்ந்த தியானம் இயல்பாகவே கைகூடும்’ என்று ஆசீர்வதித்தார். அது அப்படியே நடந்தது.
(சுவாமி விஞ்ஞானானந்தரின் ஜெயந்தி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s