ஆசிரியர்களே, நாட்டைப் பிரகாசப்படுத்துங்கள்!

ஆசிரியர்களே, நாட்டைப் பிரகாசப்படுத்துங்கள்!

1921-ஆம் ஆண்டு. பத்திரிகையாளர் கூட்டம். இந்தியா விடுதலை பெறுமா?” என்று கேட்டார் ஒரு நிருபர்.

சூரியன் கிழக்கில் உதிப்பது எவ்வளவு உண்மையோ, அவ்வாறே இந்தியாவும் விடுதலை பெறும். ஆனால் பெற்ற விடுதலையைப் பேணி வளர்க்க ஆட்கள் எங்கே? என்பதுதான் எனது ஏக்கம்” என்றார் சாது வாஸ்வானி.

சுவாமி விவேகானந்தரிடமும் ஒருவர், இதே கேள்வியைக் கேட்டபோது, சுதந்திரத்தைப் பேணும் மனிதர்கள் எங்கே?” என்று அவரும் கேட்டார். இந்தத் தீர்க்கதரிசன வார்த்தைகள் எவ்வளவு உண்மையாயின!

சாது வாஸ்வானி 1933-இல் மீரா இயக்கத்தைத் துவக்கினார். சில சிறுமிகளுக்காக ஆரம்பிக்கப்பட்ட இச்சிறிய பள்ளி இன்று நிழல் தரும் மரமாகப் பல கிளைகளுடன் வளர்ந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு ஒரு புதிய முறைக் கல்வியை அளித்து வருகிறது.

பள்ளி, கல்லூரிகளிலும் தகுதியான கல்வியைப் பரப்புவதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

உடற்பயிற்சி, திறந்தவெளிக் கல்விக்கூடங்கள், சமூகசேவை, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல் ஆகியவை கல்வித் திட்டங்களில் முக்கியமாக இடம் பெற வேண்டும். இவற்றுடன் மன, ஆன்மிக நலனும் இணைய வேண்டும்.
நமக்குத் தேவை உண்மையான கல்வி மையங்கள்; மாணவர்கள் நல்வழியில் வாழ வழிகாட்டும் மையங்கள். இன்று நம் மாணவர்கள் பல துறைகளில் படிக்கின்றனர்.
ஆனால் நன்னெறியில் வாழ்வது எப்படி என்பதை யாரும் அவர்களுக்குக் கற்பிப்பதில்லை.

வேண்டியது வார்த்தை ஜாலமல்ல, நல்வாழ்வே.
சொற்கள் மாணவர்களின் மனத்திறனை வளப்படுத்தலாம்.
விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் முன்னேறியிருக்கலாம். ஆனால் மூளையின் சக்தி விரிவால் மட்டும் நாட்டின் இன்றைய பிரச்னைகள் தீரப்போவதில்லை. ஒளிமிக்க, விழித்தெழுந்த உள்ளங்கள்தான் தேவை.

அல்லலுறும் மக்களுக்குச் சேவை செய்திட, தோல்வி மனப்
பான்மையை அகற்றி, தங்களைத் தாங்களே வலிமைப்படுத்தும் திறனை எப்படி வளர்த்துக் கொள்வது?

எல்லா உயிரினங்களையும் போற்றி அவற்றைப் புனிதமாக மதிக்க எப்படி மனவளர்ச்சி பெறுவது? தனக்கு மட்டுமின்றி, பிறருக்காகவும் வாழ எப்படி ஆன்மிக வளர்ச்சி அடைவது?
எப்படி எல்லோரையும் நண்பர்களாக்கித் தொடர்ந்து வாழ்வது? பிறருடன் பழகும்போது எப்படி நடுநிலை வகிப்பது? என்பதை எல்லாம் மாணவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும்.

‘அறிவு நன்கு வளரட்டும். ஆயினும் அடுத்தவரை மதித்துப் போற்றிடும் மனப்பாங்கும் நம்முள் வளரட்டும்’ என்கிறார் ஓர் ஆங்கிலக் கவிஞர். இதை மூன்று வகையாகக் கூறலாம். அவை:
நமக்கும் மேலானவற்றை மதிப்பது,
நம்மைச் சுற்றியுள்ளதை மதிப்பது,
நம் கீழ் உள்ளவற்றை மதிப்பது.

மதித்து நடக்கும் மனப்பான்மை, பூமித்தாயைப் போற்றி வணங்குவது, இயற்கை அன்னையை மதித்து வாழ்வது ஆகியவற்றைப் பெற்றிருந்தால், நமது சுற்றுப்புறப் பிரச்னைகளெல்லாம் பரிதியைக் கண்ட பனிபோல் மறைந்துவிடும்.

நான் மேலைநாட்டில் எங்கு சென்றாலும் பிறரை மதியா
மையைக் காண்கிறேன். இரு தினங்களுக்கு முன் அமெரிக்காவில் ஒரு வகுப்பில் ஆசிரியை மாணவர்களுக்கு ஒரு கடுந்தேர்வு வைத்தார். அதற்காக வஞ்சம் தீர்க்கச் சில மாணவர்கள் ஆசிரியை அருந்தும் காபியில் நஞ்சைக் கலந்தார்களாம்.

ஆசிரியை காபியை அருந்தப்போகும் சமயத்தில் மனம் கலங்கிய ஒரு மாணவி காபியில் நஞ்சிருப்பதாகக் கூறி
விட்டாள். காவல்துறையினர் அழைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

மாணவர்கள் அவ்வாறு நடக்கக் காரணம் என்ன? நம் இளைஞர்களில் பெரும்பாலோர், ஆணும், பெண்ணும் போதைக்கு ஆளாவதேன்? மக்கள் கொடுமைகள் இழைப்பதேன்?

காரணம், நல்வழியில் வாழ அவர்களுக்குக் கற்பிக்காதது
தான். குற்றவாளிகளைச் சிறைச்சாலைகளுக்கு அனுப்புவதைவிட அவர்களை ஏன் நன்னெறியில் வாழக் கற்றுத் தரும் பள்ளிகளுக்கு அனுப்பக் கூடாது? முதலில் அவர்களை நல்ல பள்ளிகளில் படிக்க வைத்திருந்தால் அவர்கள் சிறைச்சாலைகளுக்குச் செல்வார்களா?

நவீனக் கல்வியின் புதிய முயற்சியே மீரா இயக்கம். மீரா கல்விக்கூடங்களிலும் தேர்வுகளில் மாணவர்கள் உயர்தர நிலைகள் பெறுவதற்குத் தேர்ச்சி பெற்றாலும், தேர்வில் முன் நிற்பது மட்டும் முக்கியமல்ல. அத்துடன் ஐந்து கருத்துகளுக்கு மீரா இயக்கம் முக்கியத்துவம் அளிக்கிறது. இதை நான் இந்த இயக்கத்தின் ஐந்து விரல்களாகப் போற்ற விரும்புகிறேன்.

நடைமுறைக்கேற்ற சிலவற்றைக் கூறுகிறேன்.

1. குணம்: இன்றைய இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் குணத்தை வளர்ப்பதுதான் முக்கியமான தேவை. மக்களுக்குக் குணமில்லையென்றால் அரசியலோ, மற்ற துறைகளோ எவ்வாறு செயல்படும்? நாடு எப்படி வளமுறும்?

உங்கள் வகுப்பறைகளை மாணவர்களால் நிரப்பாதீர்கள்.
60/70 பேர்களை வைத்துக் கொண்டு ஓர் ஆசிரியரால் என்ன செய்ய முடியும்? நற்கல்வியைப் பரப்ப விரும்பினால் உங்கள் வகுப்பில் 20 / 25 மாணவர்களுக்கு மேலிருக்கக் கூடாது. மிகுதியாக மாணவர்கள் இருந்தால் கல்வித்தரம் குறையவே செய்யும்.

அழிவில்லா வருங்காலத்தை நோக்கி இந்தியா பீடு நடை போட வேண்டுமென்றால் ஒவ்வோர் ஊரிலும் சில பள்ளி
களாவது இருக்க வேண்டும். அங்கு எண்ணிக்கைக்கு அல்ல, தரத்திற்குத்தான் மதிப்பு என்றிருக்க வேண்டும்.

2. சேவை: எளியோர், மனமுடைந்தோர், ஊனமுற்றோர், வீடற்றோர், நம்பிக்கை இழந்தோர்க்கு கருணை உள்ளத்துடன் சேவையாற்ற வேண்டும்.

தீய வழிகளில் மாணவர்கள் செல்லாதபடி கண்டிப்புடன் இருக்க வேண்டும். எண்ணங்களில் அக்கறை செலுத்தக் கற்றுத் தாருங்கள். எண்ணங்களே வாழ்வின் சுவர்கள். தொடர்ந்து ஓர் எண்ணம் மனதில் இருந்தால் அதுவே செயலுக்கு இட்டுச் செல்லும்.

அது சேவை எண்ணமானால் அதுவே சேவையாற்ற வழிவகுக்கும். தாழ்ந்த எண்ணங்கள் தாழ்வான செயல்களுக்கு இட்டுச் செல்லும். திரும்பத் திரும்ப ஒன்றைச் செய்தால் அதுவே வழக்கமாகிவிடும். வழக்கம் என்பது அஞ்சத்தக்கது.
3. இந்தியப் பண்பாட்டை நேசி: தற்கால விஞ்ஞான அறிவுடன் நம் நாட்டின் பழங்கால அறிவும் கலந்த கல்வி தரப்பட வேண்டும். நல்வாழ்விற்குத் தேவை இதுதான்.
பிறர் முன்னிலையில் மாணவர்களின் குறைகளைக் கூறா
தீர்கள். தனியே அழைத்து அவர்களை நல்வழிப்படுத்துங்கள். பிறர் முன் அவர்களைப் பாராட்டுங்கள். பாராட்டுதலே மாணவர்களின் மேலான அம்சத்தை வெளிக்கொணரும்.

4. எல்லா உயிர்களையும் மதித்து வாழுங்கள்: ஒரே குடும்பப் படைப்பில் பறவைகளும் விலங்குகளும் மானிடரின் இளைய சகோதர சகோதரிகள்தானே! ஆகவே மனிதனின் கடமை தன் உடன்பிறப்பாகிய இவர்களுடன் தன் அன்பைப் பகிர்ந்து இவற்றைக் காப்பாற்ற வேண்டும் என்பதே.

ஆன்மிக வளத்தைப் பெருக்குவதே போற்றத் தகும் பணி.
மாணவர் உள்ளங்களை விழிப்புறச் செய்யுங்கள். சேவை
யில் அவர்கள் மலரட்டும். துன்புற்றோர், புண்பட்டோருடன் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யுங்கள்.

நேரம் கிடைத்த போதெல்லாம் மாணவர்களை முதியோர், ஊனமுற்றோர் இல்லங்கள், ஏழ்மையில் உழலும் நோயாளிகள் தங்கியுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்வது புனித மீரா கல்விக்கூடங்களில் நடக்கின்றது.

5. மாணவர்கள் இறைவனை மையமாகக் கொண்டு தியான சக்தி பெற சிறிது நேரமாவது முயல வேண்டும்: அதற்கு அவர்களுக்குத் தினமும் மௌனமாக இருக்கப் பயிற்சி தாருங்கள்.

கடவுளின்றி கல்வி என்ன சாதிக்கும்?
ஒவ்வொரு குழந்தையும் ஆத்மாவே என்பதை ஒரு போதும் மறக்கலாகாது. ஆகவே அதன் உடல், மன நலன்களில் அக்கறை எடுக்கும்போது,
அதன் ஆன்மிக வளர்ச்சியைப் புறக்கணிக்கக் கூடாது.
புனித மீரா பள்ளிகளில் தினமும் மாணவர்கள் இறையுணர்விலும் ஒருவரை ஒருவர் போற்றும் பண்புடனும் கூடுகின்றனர்.

அங்கு அவர்களுக்கு மேலை, கீழைநாடுகளில் தோன்றிய ஞானிகள் மற்றும் மக்களுக்குத் தொண்டாற்றியவர்களின் வரலாறும் அறிவுரைகளும் போதிக்கப்படுகின்றன.
உயரிய குறிக்கோள்கள், வெறும் குறிக்கோள்களாக மட்டுமே நின்றுவிடாமல் அவற்றைச் செயல்படுத்த வேண்டும் என்
பதை மாணவர்கள் எண்ணங்களில் பதியுமாறு செய்யப்படுகிறது.

படிப்பு, வாழ்வை மேலோட்டமாகத் தொடுமே அன்றி, உள்நோக்கிச் செல்ல உதவுமா? மேனாட்டுக் கலாச்சாரம் இருளடைந்திருந்த காலத்தில் இந்தியா வலிமை பெற்று முன்னணியில் இருந்தது.

ஆனால் சென்ற பல நூற்றாண்டுகளாக எவ்வளவு துயரில் ஆழ்ந்திருந்தது நம் நாடு, பாருங்கள்! இருந்தாலும் இந்தியா தோல்வியுறவில்லை. இந்தியாவைத் தோற்கடிக்க முடியாது.
அதன் மக்கள் தங்கள் பழங்கால ரிஷிகள் கண்ட ‘வாழ்க்கையின் ஆதாரம் கடவுளே’ என்ற கோட்பாட்டை விடாதிருக்கும்வரை அவர்களுக்குத் தோல்வி எங்கே!
கடவுளை நோக்கிச் செல்லுங்கள். அவரை நேசியுங்கள்.
உங்களுடன் வாழ்வோரை நேசியுங்கள்.

தற்கால வறட்டு நாகரிகத்தால் பிடுங்கித் தின்னும் பிரச்னை
களுக்கெல்லாம் அன்பு ஒன்றே மருந்து.

மக்களும், ஏன் நாடுகளும் ஏங்கும் அமைதிக்குத் தேவை, அன்பு அல்லவா! சொற்களைவிட, செயல்
களே பேசும் என்பதை நாம் மறக்கக் கூடாது.

தத்துவ ஞானி பிளேட்டோ கூறினார்: பிள்ளைகளைப் பழக்கும் முன் நீங்கள் உங்களைப் பழக்கிக் கொள்ளுங்கள். அவர்களைக் கண்டிப்பதை விட்டு அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களோ அப்படி நீங்கள் வாழ்ந்து காட்டுங்கள்”.

நீங்கள் உயர்ந்த ஆசிரியராக வேண்டுமென்றால்..?
உயர்ந்த ஆசிரியராக மாற என்ன செய்ய வேண்டுமென கேட்ட இளைஞனுக்கு தாமஸ் கார்லைல் எழுதியது:
மாணவர்கள் எப்படி இருக்க வேண்டுமென்று நீ விரும்புகிறாயோ, அவ்வாறே நீ இரு. மற்றவை எல்லாம் அருளற்ற கேலிக்கூத்தும் குரங்குத்தனமும் ஆகும்”.

ஒரு நாள் கிரேக்க நாட்டின் பெரிய கட்டிட அமைப்பாளர் ‘சோலான்’ என்பவர் மக்கள் முன் தோன்றினார். அவரது கையில் ஓர் அழுகிய ஆப்பிள்.

இதிலிருந்து சுவையான ஆப்பிளை உருவாக்க முடியுமா?” என்று கேட்டார் அவர். யாரும் பதில் சொல்ல முடியவில்லை.
apple
ஒரு வழியுண்டு” என்ற சோலான் அழுகிய ஆப்பிளை நான்கு துண்டுகளாக்கினார். அதிலிருந்து விதைகளை எடுத்தார்.
இவற்றை விதைத்தால் அவற்றிலிருந்து புதிய, சுவைமிக்க, ஆப்பிள்கள் தோன்றும்” என்றார் அவர். எப்பேர்ப்பட்ட உண்மை இது.

மனித விதைகளே குழந்தைகள். புதிய சமுதாயத்தை உருவாக்க, குழந்தைகளிடமிருந்து தொடங்கவும்.
ஆசிரியர்களே, புதிய இந்தியாவை உருவாக்க நீங்கள் விரும்பினால் – வலிமையுடனும் சுதந்திரமாகவும், தன் திறத்
தால் வீறுநடை போட்டு அழிவற்ற நிலை நோக்கி முன்னேறும் பாரதம் எல்லா நாடுகளுக்கும் உதவிக்கரம் நீட்டித் துயர் துடைக்கும்.

புதிய காலைக் கதிரவன் ஒளித்திரளில் மீண்டும் பிரகாசிக்கும் இந்தியாவை உருவாக்க விரும்பினால் உங்கள் சேவையை குழந்தைகளுடன் தொடங்குங்கள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s