அன்பு அம்மா

அன்பு அம்மா

பவேஷ்வர் சென் பட்டதாரி இளைஞர். எதையும் சந்தேகிக்கும் இயல்புள்ளவர்.

கொல்கத்தாவில் அன்று தம் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். நண்பர்கள் அன்னை ஸ்ரீசாரதா தேவியைப் பற்றிப் பெருமையாகப் பேசியது அவருக்குச் சிறிதும் பிடிக்கவில்லை.

ஏதோ ஓர் ஏழை பிராமண விதவையை லோகமாதா என்றும் அன்னை என்றும் ஒரேயடியாகப் புகழ்கிறீர்களே! நாளையே நாம் ஜெயராம்பாடிக்குச் செல்வோம். இதெல்லாம் பொய் என உங்களுக்கு நான் நிரூபிக்கிறேன்” என்று சென் தம் நண்பர்களிடம் சவால் விட்டார்.

மறுநாள் நண்பர்கள் மூவரும் ஜெயராம்பாடி சென்றனர். ஸ்ரீசாரதாதேவியாரை அவர்கள் அதுவரை தரிசித்த தில்லை. வழியில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது. மூவரும் ஆங்காங்கே நின்று களைப்புடனும் பசியுடனும் ஜெயராம்பாடி சென்ற போது இருட்டிவிட்டது. தெருக்களிலும் யாரும் இல்லை.
‘இந்த இருட்டில் சாரதாதேவியின் வீட்டை எப்படிக் கண்டுபிடிப்பது?’ என்று அவர்கள் கலங்கினர்.

அப்போது தெருமுனையில் வயதான ஒரு பெண்மணியும் சிறுவன் ஒருவனும் கையில் லாந்தர் விளக்குடன் நின்று கொண்டிருந்தனர்.

இவர்களைக் கண்டதும், அந்த மூதாட்டி அவர்கள் எங்கு போகிறார்கள் என்று கேட்டறிந்து கொண்டு, தமக்கு அந்த இடம் தெரியும் என்றும் கூறினார்.
HM20
மூவருக்கும் ஆச்சரியம். நாங்கள் வழி தேடிக் கொண்டிருப்பது உங்களுக்கு எப்படி தெரிந்தது?” என்று சென் கேட்டார்.
அதற்கு அவர், சாரதாதேவியின் வீட்டிலிருந்தே நான் வருகிறேன். அவரைப் பார்க்கவரும் பலரை நான் அழைத்துச் செல்வது வழக்கம்” என்றார்.

பவேஷ்வர் அம்மூதாட்டியை ஸ்ரீசாரதாதேவியின் வீட்டு வேலைக்காரி என எண்ணி சகஜமாகப் பழகினார்.
மூவரும் அவரைத் தொடர்ந்து சென்று வீட்டை அடைந்தனர். மழையில் நனைந்து அலைந்ததால் மிக வும் களைத்திருந்தனர். சென்னிடம் அந்தப் பெண்மணி, வெந்நீர் வைத்துத் தருகிறேன். நன்கு குளித்துக் களைப் பாறுங்கள்” என்று கூறினார்.

குளித்து முடித்ததும் சென் அவரிடம், எங்கள் துணி களும் காலணிகளும் சேறாகியுள்ளன” என்றார். உடனே அப்பெண்மணி அவற்றைச் சுத்தப்படுத்தினார். மூவருக்கும் இரவு உணவும் கொண்டு வந்து கொடுத்தார்.
பிறகு சென், நடந்து நடந்து எங்கள் கால்கள் மிகவும் வலிக்கின்றன. கால்களுக்கு ஒத்தடம் தர உப்பு கலந்த வெந்நீர் தர முடியுமா?” என்று கேட்டார். உடனே அவர் அதையும் செய்தார்.

பிறகு சென், பாட்டி, நீ எங்களுக்கு எல்லா உதவிகளையும் அன்புடன் செய்தாய், மிக்க நன்றி. நாளை உன் சாரதாதேவியைப் பார்க்க விரும்புகிறோம். எத்தனை மணிக்கு அவரைப் பார்க்கலாம்?” என்று வினவினார்.
அதற்கு அப்பெண்மணி, காலை ஒன்பது மணிக்கு அவரைப் பார்க்கப் பக்தர்கள் வருவார்கள்” என்றார்.

சென் தம் நண்பர்களிடம், நாளை அப்பிராமண விதவையின் முகத்திரையைக் கிழிக்கிறேன் பாருங்கள்” என்று கண்களில் குறும்பு மின்ன வீறாப்பு பேசினார்.

பொழுது விடிந்தது. நண்பர்களுக்குத் தேவையானவற்றை அதே பெண்மணி செய்து கொடுத்தார்.
மணி ஒன்பதானது. அன்னை ஸ்ரீசாரதாதேவியைத் தரிசிக்க பக்தர்கள் வரத் தொடங்கினர். மூவரும் சென்று வரிசையில் நின்றனர்.

அவர்கள் உள்ளே செல்லும் நேரம் வந்தது. உள்ளே ஒரு சிறு மேடையில் அன்னை தம் புடவையால் முகத்தை மூடிக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் காலடியில் பக்தர்கள் அர்ப்பணித்திருந்த மலர்கள் இருந்தன.

இதைப் பார்த்ததும் சென் நண்பர்களிடம், பாருங்கள், இவர் ஜகத்ஜனனியாம்! அன்பே உருவான அன்னையாம்!” எனக் கூறி நகைத்தார்.

அன்னையைத் தரிசித்த சென் அவரிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புரியாமல் விழித்தார்.

உடனே அன்னை தம் முகத்திரை யைச் சற்று விலக்கி மூவரையும் நோக்கி, குழந்தைகளே, ஏதோ பேச வேண்டும் என விரும்பினீர்களே” என்று கேட்டுப் புன்னகைத்தார்.

மூவரும் திடுக்கிட்டனர். ஏன்?
அங்கு அவர்களைப் பார்த்து சிரித்தது வேறு யாரும் அல்ல. முந்தைய இரவு அவர்களுக்கு வழிகாட்டி, உண வளித்து, ஏன், காலணிகளைக்கூடச் சுத்தம் செய்து தந்த அதே பெண்மணிதான்!

அன்னையே அவ்வாறெல்லாம் செய்திருந்தார்.
பவேஷ்வர் சென் தம் தவறை உணர்ந்து அன்னையின் காலில் விழுந்து, அம்மா, என்னை மன்னிக்க வேண்டும். தாங்கள் உண்மையிலேயே ஜகத்ஜனனிதான். நான் தங்களை ஏளனமாகப் பேசியும் தாங்கள் எங்களுக்குச் சேவை செய்தீர்களே! எங்கள் காலணிகளைக்கூடச் சுத்தம் செய்தீர்களே! இத்தகைய அன்பு காட்டுபவர் அன்னை அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்? எங்களை மன்னித்து அருள வேண்டும்” என்று கண்ணீருடன் தழுதழுத்த குரலில் வேண்டினார். அன்னையும் அவர்களை ஆசீர்வதித்தார்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s