அன்னை தம்மைப் பற்றி…

அன்னை தம்மைப் பற்றி…

ராதை – சாரதை

அன்னையிடம் ஒரு பக்தை தான் அன்னையை எப்படிப் பார்க்க வேண்டும் என்று வினவினாள்.
அன்னை: நீ என்னை ராதையாக நினைத்துக் கொள்ளலாம் அல்லது உன் மனதிற்குப் பிடித்த வேறு எந்த விதமாகவும் நினைத்துக் கொள். என்னை உன் சொந்த அம்மா வாக நினைத்தாலும் போதும்.
HM21
அன்னை: என்ன கூறுகிறாய் கேதார்? நான்தான் எல்லாமே. நீ ஏன் பதட்டப்படுகிறாய்?

அன்னை: (நளினியிடம்), நீ ஏன் காசிக்குச் செல்ல வற்புறுத்துகிறாய்? காசி அன்னபூரணி தேவி நான் உன்னுடன் பேசுவது போலப் பேசுவாளா?

சீதை – சாரதை
ராது ஒருமுறை அன்னையைக் காலால் எட்டி உதைத்துப் பழியை அவர் மீதே போட்டாள். அடக் கடவுளே! நீ என் காலைத் தொட்டுவிட்டாயே, என் கதி என்னவாகும்?” என்று கேட்டாள்.
அப்போது அங்கு வந்த பிரம்மசாரி ராஷ்பிஹாரி, பைத்திய மாமி (ராது) அன்னையை அவமதித்தாலும் ஏசினாலும் தன் கால் அன்னை மீது பட்டதற்குப் பயப்படத்தான் செய்கிறாள்” என்றார்.
அன்னை உடனே, மகனே, ராமன் சாட்சாத் நாராயணன், சீதைதான் மகாலட்சுமி என்று ராவணனுக்குத் தெரியாதா என்ன? ஆனாலும் அவன் அவனது பாத்திரத்தை நடித்தான். அதுபோல் இவளுக்கும் என்னைத் தெரியாதா! நன்றாகத் தெரியும். ஆனால் அவள் இந்தப் பாத்திரத்தை நடிக்கவே பிறந்துள்ளாள்” என்றார்.

முக்தி தருவது சுலபம்

ஒருவர் அன்னையிடம் முக்தி, பக்தி பற்றிக் கேட்டார்.
அதற்கு அன்னை, முக்தியை உடனேயே, மிகச் சுலபமாகத் தர முடியும். ஆனால் பகவான் பக்தியை அவ்வளவு சுலபத்தில் தருவதில்லை” என்றார்.

இந்த வார்த்தைகளை அன்னை சொன்ன விதத்திலிருந்து முக்தியைக் கொடுப்பது அவருக்கு மிகவும் சுலபம்; தமது உள்ளங்கையிலிருந்தே எடுத்துக் கொடுத்துவிட முடியும் என்பது போல இருந்தது. ஆனால் அவர் உடனே பேச்சை மாற்றி வேறு விஷயங்களைப் பேச ஆரம்பித்துவிட்டார்.

குருதேவரே எல்லாம்!
சீடர்: எனக்கு நான்கு கைகளைக் கொண்ட கடவுளைக் காண விருப்பமில்லை.
அன்னை: இங்கு இருப்பதே போதும். அப்படியே நானும் நினைக்கிறேன். இயற்கைக்கு அப்பாற்பட்ட காட்சிகளால் என்ன லாபம்? ஸ்ரீராமகிருஷ்ணர் உள்ளார்; அவரே எல்லாம் என்பதும் தெரியும். வேறு என்ன தெரிய வேண்டும்?

தூய்மை தரும் தேவி
அன்னை ஜெயராம் பாடியில் இருந்தபோது அங்கு சமையல் செய்த பிராமணப் பெண் இரவு ஒன்பது மணி அளவில் வந்து, நான் ஒரு நாயைத் தொட்டுவிட்டேன். உடனே குளிக்க வேண்டும்” என்றாள்.

இரவு வெகுநேரமாகிவிட்டது. இப்போது குளிக்காதே. கை கால்களைக் கழுவிக் கொண்டு துணியை மட்டும் மாற்றிக் கொள். அது போதும்” என்றார் அன்னை.

ஓ, அது போதாது” என்றாள் அந்தப் பெண்.
உடனே அன்னை, அப்படியானால் சிறிது கங்கை நீரை உன் உடல்மீது தெளித்துக் கொள்” என்றார். அதுவும் அவளைத் திருப்திப்படுத்தவில்லை.
இறுதியில் அன்னை, சரி, அப்படியானால் என்னைத் தொடு” என்றார்!

லக்ஷ்மி – சாரதை
சில நேரங்களில் தாம் ஆன்மிக அனுபவத்தில் திளைக்கும்போது அன்னை ஒரு நெருங்கிய தோழியுடன் பகிர்ந்து கொள்வதைப் போல் தமது உயர்ந்த ஆன்மிக நிலை மற்றும் இறையனுபூதி பற்றிப் பேசுவார்.

அந்த நேரங்களில் அவர் தம்மை லக்ஷ்மிதேவியுடன் ஒப்பிட்டோ, எல்லா உயிரினங்களுக்கும் தாயாகப் பாவித்தோ பேசுவார். தாம் எல்லோருக்கும் முக்தி அளிக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்வார். ஆனால் அத்தகைய வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வெளி வந்ததும் அவர் ஏதோ தம்மை அறியாமல் பேசிவிட்டது போலப் பேச்சை மாற்றிவிடுவார்.

அன்னைக்குப் பெரிய உடல் வேண்டும்!

அன்னை: என்னைத் தூங்கச் சொல்கிறார்கள். என்ன தூக்கம்! என்னால் தூங்க முடியுமா? தூங்குவதை விட்டு அந்நேரத்திலும் ஜபம் செய்தால் உயிர்களுக்கு நன்மை உண்டாகுமே என்று தோன்றுகிறது.

இந்தச் சிறிய உடலுக்குப் பதிலாக ஒரு பெரிய உடல் இருக்குமானால் இன்னும் எவ்வளவோ பேருக்கு நன்மை செய்ய முடியுமே என்ற எண்ணமும் எழுகிறது.

அன்னை காளி

அன்னை ஒருவரிடம் யுத்தத்தைப் பற்றிப் படிக்கச் சொன்னார். யுத்த பூமியில் பலர் இறந்த செய்தியைப் படித்தவுடன் அவரது முகபாவம் மாறத் தொடங்கியது. முதலில் மெதுவாக, ‘ஹா… ஹா…’ என்று சிரிக்க ஆரம்பித்தார். பிறகு குரலை உயர்த்தி ‘ஹா… ஹா… ஹா…’ என அவர் கம்பீரமாகச் சிரித்தது இரு நிமிடங்களுக்கு எங்கும் எதிரொலித்தது.
அவர் அருகில் அமர்ந்திருந்த யோகின்மாவும் கோலாப்மாவும் உடனே அன்னையை வணங்கி அமைதியாகும்படி வேண்டினர். பின் மெதுவாக அன்னை அமைதியடைந்து தம் பழைய நிலைக்குத் திரும்பினார்.

வேறு அம்மா இருக்கிறாளா என்ன?

பக்தை: இன்று எத்தனையோ பிள்ளைகள் அம்மா, அம்மா என்று உங்களிடம் வந்து எவ்வளவு தொல்லைகள் தருகிறார்கள்? நாங்கள் உங்கள் வயிற்றில் பிறக்கவில்லை. நாங்கள் உங்கள் பிள்ளைகள் இல்லையே?

இதைக் கேட்டு அன்னை நிமிர்ந்து கம்பீரமாகச் சற்றே உரத்த குரலில் கூறினார்:
என்ன பேசுகிறாய்? நீங்கள் என் வயிற்றில் பிறக்கவில்லையா? இல்லையென்றால் யார் வயிற்றில் பிறந்தீர்கள்? என் பிள்ளைகள் இல்லையா? இல்லையென்றால் யாருடைய பிள்ளைகள்? என்னைத் தவிர வேறோர் அம்மா இருக்கிறாளா என்ன? எல்லாப் பெண்களிலும் நானே உள்ளேன். யார் எங்கிருந்து வந்தாலும் சரி, அனைவரும் என் பிள்ளைகளே. இது அறுதி சத்தியம். இதைப் புரிந்து கொள். ‘அம்மா’ என்று கூறி என்னிடம் வருபவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் அனைவரும் என் பிள்ளைகளே!”

அன்னையும் குருதேவரும்

குருதேவரின் உபதேசங்களைப் பற்றி அன்னை கூறிக் கொண்டிருந்தார்.
அதைக் கேட்டு ஒரு பக்தை, அம்மா, தெய்வமே உடலெடுத்து மனித உருவில் வந்தபோது என் அதிர்ஷ்டமின் மையால் அவரைக் காண முடியாமல் போயிற்றே!” என்று வருத்தத்துடன் கூறினாள்.
உடனே அன்னை தம்மைக் காட்டி,குருதேவர் சூட்சும உருவில் இந்த உடலில் இப்போது இருக்கிறார். இதை அவரே என்னிடம் கூறியிருக்கிறார்” என்றார். (சுவாமி கேசவானந்தரின் ‘The faint Memory of Mother’)

அன்னை எப்போது வருவார்?
ஜெயராம்பாடியில் ஒரு நாள் அதிகாலை. கத்திக் கொண்டிருந்த ஒரு கன்றின் குரலைக் கேட்ட அன்னை, “வருகிறேன் அம்மா, வருகிறேன். இதோ உன்னை அவிழ்த்து விடுகிறேன்” என்று கூறி விரைந்து சென்று அதனை அவிழ்த்துவிட்டார்.
‘ஆகா! இந்தக் கன்றைப் போல் அன்னையை நாம் அழைக்க முடியுமானால் நமது பந்தங்களும் விடுபடும் அல்லவா!’ என்று ஏங்குகிறார் சுரேந்திரநாத் சர்க்கார் என்ற பக்தர்.

அன்னை பகவதி
அன்னை: எல்லோரும் என்னை பகவதி என்கின்றனர். அது உண்மை தான் என்றே நானும் நினைக்கிறேன். இல்லாவிட்டால் என் வாழ்க்கையில் இவ்வளவு அற்புதங்களெல்லாம் ஏன் நடக்க வேண்டும்?
அவற்றைப் பற்றி கோலாப், யோகின் இவர்களுக்கு நிறைய தெரியும். ‘இது நடக்கட்டும்’, ‘அதை உண்பேன்’ என்று எதை நினைத்தாலும் பகவான் அதை அப்படியே நிறைவேற்றித் தருகிறார்.

அன்னை: லௌகிக கருமங்களுக்கு இடையே எனக்கு ஆசை உண்டாகும் போதெல்லாம் அனைத்தும் மஹாமாயையாகிய அம்மையின் திருவிளையாடலேயன்றி வேறல்ல என்பதை அறிகிறேன்.

பக்தர்: அம்மா, உங்களை மக்கள் பகவதி என்கிறார்களே!
அன்னை: மக்கள் என்ன சொல்வது! நானே சொல்கிறேன்.
அன்னை: நான் உயிரோடிருக்கும்வரை எனது உண்மை இயல்பை எவராலும் அறிய முடியாது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s