சூரியனின் மகிமை

சூரியனின் மகிமை
பிரும்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா

pongal.jpg

 

நமது தத்துவச் சிந்தனைகள் யாவும் சூரியனையே மையமாக வைத்து வளர்ந்தவை.
உலகின் படைப்பு, இருப்பு, அழிவு இவற்றிற்குக் காரணமான பேரொளி மனதிற்கோ, புலன்களுக்கோ
உட்பட்டதல்ல; அவற்றையும் கடந்தது. ஆனால் அதன் வெளிப்பாட்டை நாம் சூரிய மண்டலத்தில் தரிசிக்க முடியும்.
நக்ஷத்திரங்களின் பிரகாசத்தில் வெறும் ஒளி மட்டு
மின்றி, சில தெய்விக சக்திகளும் உள்ளன என்று கண்டு
பிடித்து, பூமியின் மீது அவை செலுத்தும் நுண்ணிய தாக்கத்தையும் தரிசித்தார்கள் நம் மகரிஷிகள்.
நம் புராணங்கள் கூறும் பல தேவதைகளின் கதை
கள், கோள்கள் மற்றும் விண்மீன்கள் – இவை அனைத்
தும், விரிந்து பரந்த ஆகாயத்திலிருக்கும் ஜோதி மண்ட
லங்களில் ஒளிந்துள்ள பிரபஞ்ச சக்தியின் (Cosmic Energy) விளையாட்டே என்பது தெளிவாகிறது.
முக்கியமாக நம் ஜோதிக் குடும்பத்திலிருக்கும் சௌர சக்தியை (சூரிய சக்தி)த் தவத்தால் உணர்ந்த மகரிஷிகள், பலவிதச் சாதனைகள் மூலம் சூரிய மண்டலத்தில் இருக்கும் திவ்ய சக்தியை நம்முள் வாங்கிக்கொள்ளும் வழிமுறைகளை நமக்கு அளித்துள்ளனர்.
சூரியனை விஞ்ஞான ரீதியாக ஆராய்ந்தால், அதுவே பிராண சக்தியின் மையம் என்பது புரியும். உபாசனை செய்து வணங்கினால் சர்வ தேவதைக
ளின் இருப்பிடமான பரஞ்சோதி என்று அறியலாம்.
உதயாதுதய வாரம் என்று காலத்தைக் கணக்கிடும்
போது சாஸ்திரம் கூறுகிறது. சூரிய உதயத்
திலிருந்து மறுநாள் சூரிய உதயம் வரை ஒரு நாள். இது சாஸ்திர ரீதியான முறை.
சூரியனின் உதயம் எந்த கிரகத்தின் உதய வேளை
யில் நடக்கிறதோ, அதைக் கொண்டு அந்தத் தினத்திற்
குப் பெயர் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிரகத்தின் ஹோரையில் சூரியன் உதிப்ப
தால் பானுவாரம் (ஞாயிறு), சோமவாரம் (திங்கள்), மங்களவாரம் (செவ்வாய்), சௌம்யவாரம் (புதன்), குருவாரம் (வியாழன்), சுக்ரவாரம் (வெள்ளி), ஸ்திரவாரம் (சனி) என்று நிர்ணயித்தார்கள்.
சூரியனிடமிருக்கும் ஏழுவித சக்திகளே இந்த ஏழு கிரக சக்திகள் என்று புரிந்துகொள்ள முடிகிறது. நன்கு ஆராய்ந்தால் ஒவ்வொரு நாளி
லும் ஏதோ ஒரு தனிப்பட்ட சக்தி இருப்பது புரியும்.
இதனை ஆதாரமாகக் கொண்டுதான் திதி, வார, நக்ஷத்திரங்களை நிர்ணயித்து, காலப் பிரவாகத்தைப் பரிசீலித்து, வான சாஸ்திரத்தைக் கணித்துள்ளார்கள்.
தினமும் சூரியோதய சமயத்தில் சூரியனை வணங்
குவதும், அர்க்கியப் பிரதானம் (நீர் சமர்ப்பணம்) செய்வதும் நாம் தொன்றுதொட்டு கடைப்பிடித்து வரும் சம்பிரதாயம். சூரிய ஹோரையில் சூரியோத
யம் நடக்கும் தினம் ஆதி வாரம்.
ஞாயிற்றுக்கிழமையை மதிப்பு வாய்ந்த ஒன்றாக யுக யுகமாக நம் ரிஷிகள் அறிந்துள்ளார்கள்.
ஒரு காலத்தில் பூமண்டலத்தின் பல பிரதேசங்க
ளில் சநாதன ஹிந்து தர்மம் வியாபித்து இருந்தது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மித்ர சித்தாந்தம் என்பது ஐரோப்பா கண்டத்தில் விஸ்தரித்து இருந்தது என்பதற்
குச் சரித்திரச் சான்றுகள் உள்ளன.
ரிக்வேத மந்திரங்களில் மித்ர என்ற நாமத்தால் துதிக்கப்பட்ட சூரியபகவானின் ஆராதனை அப்பிர
தேசங்களில் இருந்ததென்றும், பல சூரியக்கோவில் களும் ஞாயிற்றுக்கிழமைக்கான நியமங்களும், பாஸ்கர அர்ச்சனைகளும் அங்கு நிலவின என்றும் சரித்திரம் தெரிவிக்கிறது.
ஆனால் சிறிது சிறிதாக முளைத்து எழுந்த புதிய மதப் பிரசாரங்கள், மதமாற்றம், படையெடுப்பு போன்ற முறைகளைக் கையாண்டு அங்கிருந்த
மித்ர சித்தாந்தத்தை அழித்துவிட்டன.
ஆனால் அங்கிருந்த மக்களிடம் வேரூன்றிப் போயி
ருந்த ஞாயிற்றுக்கிழமை நியமங்கள் என்ற நம்பிக்
கையை அம்மதங்களால் அழிக்க இயலவில்லை.
அந்த நம்பிக்கையால் தங்கள் புதிய மதத்தைக் காத்துக்கொள்வதற்காக ஞாயிற்றுக்கிழமையையே தங்கள் பிரார்த்தனைக்கு உகந்த தினமாக ஏற்படுத்திக் கொண்டனர். இதனால் உலகமெங்கும் அதைத் தங்க
ளின் சித்தாந்தமாகவே பரப்பி பிரமிக்கச் செய்தனர்.
சூரிய நமஸ்காரம் ஆரோக்கியத்தின் அஸ்திவாரம் என்ற நம் நாட்டு யோக வித்யை இன்று உலகம் முழுவதும் பிரசித்தி அடைந்துள்ளது.
ஆரோக்கியம் பாஸ்கராதி சேத் என்ற வேதவாக்கு பிரத்யக்ஷமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.
அதிகாலையில் சூரியனை வணங்குபவர்களுக்கு அந்த நாள் சுபதினமாக அமையும். அதிலும் சப்தமி திதி சூரிய திதி என்று பெயர் பெற்றுள்ளது. அன்று சூரிய உபாசனை செய்வது சிறப்பான பலனைத் தரும்.
ஒவ்வொரு மாதமும் சுக்ல சப்தமி, கிருஷ்ண சப்தமி – இரண்டுக்குமே முக்கியத்துவம் உள்ளது. அந்தந்த சப்தமி திதிகளுக்குத் தனித்தனியான பெயர்
கள் உள்ளன. ஞாயிற்றுக்கிழமையும் சப்தமி திதியும் கலந்து வந்தால் அது ஒரு பண்டிகை தினமே.
குளிர்காலத்தில், குளிர் குறைந்து இளஞ்சூரியனின் கதிர்கள் புதிய வயல் பரப்பின்மேல் பாயும் மாக (மாசி) மாதம் சூரியனுக்குப் பிரியமான மாதம்.
அதனால்தான் தேவ முறைப்படி ஒரு மாதத்தை ஓர் ஆண்டிற்கு ஒரு நாளாகப் பார்த்தால், அதற்கு உஷத்காலம் – மகர சங்க்ரமணம்; விடியற்காலம் -மாக மாதம். ஆண்டிற்கு விடிகாலைப்பொழுது போன்றது
தான். மாசி மாதத்தில் சூரிய ஆராதனை சிறப்பு பெற்
றுள்ளது. சூரிய கிரகத்திற்கு அதிதேவதை சிவன். அதனால்தான் மாசி மாதத்திலேயே சிவனுக்குப் பிரியமான மகாசிவராத்திரி வருகிறது.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் சிறப்பான திதி உள்
ளது. சதுர்த்தி கணபதிக்கும், சஷ்டி முருகனுக்கும், சப்தமி சூரியனுக்கும், ஏகாதசி, துவாதசி விஷ்ணுவிற்
கும், அஷ்டமி, நவமி கௌரிக்கும் பிரதானமானவை. அத்திதிகள் மாக மாதத்தில் மேலும் சிறப்பு பெறும்.
கார்த்திகை மாதம் தீபத்திற்கும், மாசி மாதம் ஸ்நானத்திற்கும், வைகாசி மாதம் தானத்திற்கும் பிரதா
னமானவை. இவ்வாறு பலவித சிறப்புகளோடு மாசி
மாதம் புகழ் பெற்றுள்ளது. மாசி மாதத்து சுக்லபட்ச சப்தமி திதிக்கு ரத சப்தமி என்று பெயர்.
இந்நாள் ஒரு பூர்ணமான நாள். தீக்ஷை மேற்கொள்
வதற்கும், ஆன்மிகச் சாதனைகள் செய்வதற்கும் இந்த சப்தமி ஏற்ற நாள். ஆண்டு முழுவதும் சூரியனை வழி
பட்ட பலனை இந்த ஒரு நாள் வழிபாடே தர வல்லது.
சூரியனுக்குத் தாமிரப் பாத்திரத்தால் அர்க்கியம் அளித்து, சிவப்புச் சந்தனம், சிவப்பு நிறப் புஷ்பங்க
ளால் அர்ச்சனை செய்வது சிறப்பானது. வீட்டிற்கு வெளியே சூரிய கிரணங்கள் படுமிடத்தில் பசுஞ்சாணி
யால் செய்த வரட்டிகளைக் கொண்டு அடுப்பு மூட்டி பொங்கல் பொங்குவது சிறப்பைத் தரும். ஆரோக்கியம் மற்றும் தெய்வ அருள் இவற்றை பெற்றுத் தரும்.
ரதசப்தமியன்று பக்தர்கள் புண்ணிய நதிகளில் தலையில் எருக்க இலைகளை வைத்தபடி நீராடுவர். அன்று சூரிய பகவானின் தேர் மகர ரேகையிலிருந்து கடக ரேகையை நோக்கித் திரும்பும் நாள் என்பது ஐதீகம்.
சுமார் நான்கு மாத காலம் சூரிய வெப்பத்தைக் குறைவாகப் பெற்று, குளிர்காலங்களில் இருந்த நிலப்பகுதி வெப்பம் அதிகம் பெற்று சுகம் பெறப் போகும் திருப்பு முனையாகும் நாள்.
சூரிய ஒளி பூமியின் மேல்படும் முறையில் இன்று முதல் ஒரு திருப்பம் நிகழும். இத்திருப்பத்தின் மூலம் தேவதைகளின் அருளைப் பெறவே இப்படிப்பட்ட ஆராதனையை ஏற்படுத்தி உள்ளனர் பெரியோர்.
யுதிஷ்டிரர் தௌம்ய முனிவரிடமிருந்து சூர்ய அஷ்டோத்தர சத நாம மந்திர மாலையை உபதேச
மாகப் பெற்று ஆதித்யனின் அருளால் தடையற்ற உணவு வழங்கும் அக்ஷய பாத்திரத்தைப் பெற்றார்.
ஸ்ரீகிருஷ்ணரின் புதல்வன் சாம்பன் சூரியனை ஆராதித்து குஷ்டரோகத்திலிருந்து மீண்டான். மயூரகவி என்பவர் சூரிய சதகம் பாடி இழந்த ஆரோக்கியத்தைத் திரும்பப் பெற்றார்.
இவ்விதம் புராணங்களும் வரலாறுகளும் ரவியின் கிருபையையும் வைபவத்தையும் புகழ்ந்து கூறும்.
பிரத்யக்ஷ தெய்வமும் கர்மசாக்ஷியுமான சூரிய பகவானிலேயே பிரம்மா, விஷ்ணு, ருத்திரர்களும், ஜகதம்பாவும் உள்ளனர் என்று புராணங்கள் கூறும்.
ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுச்ச சிவ: ஸ்கந்த: ப்ரஜாபதி:…. ஸர்வ தேவாத் மகோ ஹ்யேஷ:
நாம் பூஜிக்கும் தேவதைகள் அனைத்தும் ஒரே தெய்வமான சூரியமூர்த்தியின் வெவ்வேறு ரூபங்களே! அதனால்
தான் ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி என்று வேதம் பானுமூர்த்தியைக் கீர்த்தனை செய்கிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s