சுவாமி விவேகானந்தரைப் பற்றி…

சுபாஷ் சந்திர போஸ் சுவாமி விவேகானந்தரைப் பற்றி பேசும் போது பரவச நிலைகளுக்கே போகிறார்:
“விவேகானந்தரைப் பற்றி எழுதும் போது நான் ஆனந்தப் பரவசங்களில் ஆழ்கிறேன். அதைத் தடுக்க முடியாது….
அவரது ஆளுமை பொலிவு மிக்கது, ஆழமானது, அதேவேளையில் பின்னலானது…. விளைவைப்பற்றி சிந்திக்காத தியாகம்,
ஓய்வற்ற செயல்பாடு, எல்லையற்ற அன்பு, ஆழமானதும் பரந்து பட்டதுமான அறிவு,
பொங்கிப் பெருகும் உணர்ச்சிகள், இரக்கமற்ற தாக்குதல்கள், குழ்ந்தைபோன்ற களங்கமின்மை –
நமது உலகில் அவர் அபூர்வமானவர். நாடி நரம்புகளில் ரத்தம் கொதித்துப் பாய்கின்ற ஆண்மகன் அவர்.
எதற்கும் விட்டுக்கொடுக்காமல், சளைக்காமல் போரிடுகின்ற போராளி அவர். அவர் சக்தியை வழிபட்டார்.
சொந்த நாட்டு மக்களை முன்னேற்றுவதற்காக வேதாந்தத்திற்குச் செயல்முறை வடிவம் கொடுத்தார்….இப்படி நான் மணிக்கணக்காக அவரைப்பற்றி கூறிக்கொண்டே போகலாம், ஆனாலும் அதன்மூலம் அவரைப்பற்றி நான் ஏதாவது விளக்கியிருப்பேனா என்றால், ‘இல்லை’ என்பதுதான் பதிலாக இருக்கும். அதில் நான் தோல்வியே கண்டிருப்பேன்.
அவர் அவ்வளவு மகிமை வாய்ந்தவர், அவ்வளவு ஆழமானவர், அவ்வளவு பின்னலானவர். சுவாமி விவேகானந்தர் ஒரு மாபெரும் யோகி;
உண்மைப் பொருளாகிய இறைவனுடன் எப்போதும் நேரடித் தொடர்பு கொள்கின்ற இறையுணர்வாளர்.
அத்தகைய உன்னத நிலையில் இருந்த அவர் இந்திய மக்களையும், மனித குலத்தையும் அற வாழ்விலும் ஆன்மிகத்திலும்
முன்னேற்றுவதற்காகத் தமது வாழ்க்கையையே தியாகம் செய்தார்.”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s