என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்?

என்ன செய்தார் சுவாமி விவேகானந்தர்?

இந்திய தேச பக்தர்களின் மரபில் விவேகானந்தருக்கு முன்னவர்கள் பெருங்காரியம் செய்தார்கள். ஆனால் நமது தேசிய தாழ்வு மனப்பான்மைச் சிக்கலை அவிழ்த்தவர் அவரே.

வாழ்க்கையின் துறைகள் அனைத்திலும் சீர்திருத்தம் செய்தோர் பலர் இருந்தனர்; ஆனால் தேச மக்கள் ஓர் அடிப்படையான பல வீனத்தாலும் தாழ்வு மனப்பான்மையாலும் வருந்தினர்; அப்பிணியைத் தீர்ப்பது அவசியமாயிற்று. இதனை பெரும் பயன் தரத்தக்க முறையிலே சாதித்தவர் சுவாமி விவேகானந்தரே.

நீங்கள் எந்தச் செயலில் உண்மையான பெருமை பெற்றுள்ளீர்கள் என்பதை அறியுங்கள்; அந்நெறியாலே இன்னும் மிக்க பெருமையை அடைய முயலுங்கள்” என்று அவர் இந்திய மக்களுக்குக் கூறினார். அதுவே அவர் கொட்டிய முரசின் அழைப்பு ஒலி.

உங்களது பெருமை ஞானப்பேற்றிலே உள்ளது. உங்களது சொந்த நலன் உண்மையாக நிறைவேறக் காத்திருப்பது அத்துறையிலே; உலகில் உங்களுக்குரிய இடமும் அதில்தான் உள்ளது”.

கிறிஸ்தவ உலகிற்கு சுவாமிஜி, இந்து மதத்தை இழிவாக நினைக்காதே. மனிதன் தூயனாய், பாவமற்றவனாய் இருப்பவன் என்றும் மயக்கத்தையும் பலவீனத்தையும் அவன் உதறிவிட்டால், தெய்வத் தன்மையை உணர வல்லவன் ஆவான் என்றும் அவனுக்கு அது கூறுகிறது. பாவத்திலே பிறந்துள்ளோம் என்று நாம் நம்பவோ, துயரப்படவோ அவசியமில்லை” என்று அறிவுறுத்துகிறார்.

விவேகானந்தர் பயமிருந்த இடத்தே தீரத்தை வைத்தார். மனிதனைக் கடவுளோடு நம்பிக்கை என்னும் உறவால் இணைத்தார். தத்துவத்தை ஆராய்ந்த தரிசனங்களுக்குள் இருந்த கொள்கை பற்றிய வேறுபாடுகளை ஒழித்தார்; வேதாந்தத்தைப் பெருமையும் உறுதியும் வாய்ந்த ஒரு சமயமாக்கினார். அரசியல் உட்பட அனைத்து முயற்சிகளும் ஞானத்துக்கு உட்பட்டே மேற்கொள்ளப்பட வேண்டும் என விரும்பினார்.

இதில் மகாத்மா காந்திக்கு முன்னரே அக்கருத்தை அவர் பயன்படுத்தினார். இந்து மதத்தைப் போதிய அளவிற்கு நல்ல
தாக்க அதில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று எவரும் நம்ப வேண்டாம் என்றார். அதை முழுமையாகப் பார்த்தார். அது கம்பீரமான உண்மையாகிறது என உரிமை பாராட்டினார்.

நம்மை உயர்த்திய இந்த அருள் பெற்ற ஞானிக்கு இமயம் முதல் குமரிவரை உள்ள மக்கள் தமது நன்றி கலந்த வணக்கத்தைச் செலுத்துகின்றனர்.

விவேகானந்தர் வழிபட்ட இறைவனை நமது செயல்கள் அனைத்திலும் கொணர்ந்து புகுத்துவோம். அப்போது, இயல்பான முறையில் எல்லாக் கேடுகளும் உதிர்ந்துவிடும்.
(ஸ்ரீசக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் ‘ஸ்வராஜ்யா’வில் எழுதிய குறிப்பின் மொழிபெயர்ப்பு.)

SV23_1
ஓவியம்: சந்திரசேகர், 12-III-B
அரசு உயர்நிலைப் பள்ளி, போலம்பாக்கம், மதுராந்தகம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s