சுவாமிஜி எப்படிப்பட்டவர்?

சுவாமிஜியின் சீடர்கள் கூறுகிறார்கள்
சுவாமிஜி எப்படிப்பட்டவர்?

சுவாமி சுத்தானந்தர் கூறுகிறார்:
ஒரு நாள் இருண்ட மேகங்களிடையே தோன்றிய மின்னலைச் சுட்டிக்காட்டி சுவாமி விவேகானந்தர் கூறிய பின்வரும் கடோபநிஷத்திலுள்ள மந்திரம் ஒன்று என் நினைவில் உள்ளது:
‘அங்கு சூரியன் பிரகாசிப்பதில்லை. சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளி தருவதில்லை. மின்னலும் அங்கு ஒளிர்வதில்லை. பரம்பொருளின் ஒளியால் எல்லாம் ஒளிர்கிறது. அந்த ஒளி எல்லாவற்றையும் பிரகாசிக்கச் செய்கிறது.’

எப்போதாவது மனம் சோர்வடைந்து பரம்பொருளை உணர்வது எனக்கு அப்பாற்பட்ட விஷயம் என நினைக்கும்போது சுவாமிஜியின் குரல் எங்கிருந்தோ என் காதில் ஒலிக்கும். அவரது ஆனந்தமயமான முகம் என் மனக்கண் முன் தோன்றும்.

உபநிடதத்திலிருந்து சுவாமிஜி கூறும் செய்தி என் காதுகளில் குளிர்ச்சியுடன் Žஓங்காரம் செய்யும்:
அமரத்துவத்தின் பங்குதாரர்களாகிய குழந்தைகளே, கேளுங்கள். மேலுலகில் வசிக்கும் தேவர்களே, நீங்களும் கேளுங்கள். முதன்மையான, பழமையான, இருளைப் போக்கும் மாயையை அழிக்கும் அந்தப் பரம்பொருளை நான் உணர்ந்துள்ளேன். அப்பரம்பொருளை அறிவதன் மூலம் மட்டுமே நீங்கள் பிறப்பு – இறப்பு எனும் சக்கரத்தின் சுழற்சியிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள். இதைத் தவிர முக்தி பெற வேறு வழியே கிடையாது!”

சுவாமிஜி ஒரு நாள் சுவாமி சுத்தானந்தரிடம் ப்ருஹதாரண்யக உபநிடதத்தில் கூறப்பட்டுள்ள பரம்பொருளின் தன்மையை எடுத்துரைக்குமாறு கூறினார். அங்கு கூடியிருந்த துறவிகளின் முன்னிலையில் அவர் ஆற்றிய உரையை சுவாமிஜி மிகவும் பாராட்டினார். அந்த நாளை சுவாமி சுத்தானந்தர் நினைவு கூர்கிறார்:
‘அப்படிப்பட்ட ஆர்வத்தையும் தைரியத்தையும் நம்பிக்கையையும் அளிக்கக்கூடிய வேறொரு மனிதரை நாம் எங்கு காண முடியும்? தம் சீடர்களுக்கு அவர் எழுதிய செய்தியைக் கவனியுங்கள். ‘இவ்வாறு வேறு ஒருவரால் நினைக்கக்கூட முடியுமா என யோசியுங்கள். என் ஒவ்வொரு குழந்தையும் (சீடரும்) என்னைவிட நூறு மடங்கு அதிகமான தைரியசாலியாகவும் மேன்மை பெற்றும் விளங்க வேண்டும். என்னால் செய்துகாட்ட முடியாதவற்றைக்கூட அவர்கள் செய்ய வேண்டும். அதுவே என் திடமான விருப்பம்.’

சுவாமி விமலானந்தர் கூறுகிறார்:
ஒருவரது ஆன்ம ஸ்வரூபத்தையும், இறைத்தன்மையையும் அறிவதே சுவாமிஜியின் கருத்துகள் அனைத்திலும் உள்ள மையக் கருத்து. அதுதான் அவருடைய திறமைகளுக்கெல்லாம் திறவுகோலாக இருந்தது என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன்.

சுவாமிஜி ஒரு ஞானியாக இருந்ததால் எல்லோரிடமும் அன்பு செலுத்தினார். நான் பல நேரங்களில் ஞானமும் பக்தியும் ஒன்றுக்கொன்று முரணானவை என்று நினைத்திருந்தேன். சுவாமிஜியின் முன்னிலையில் இந்தத் தவறான எண்ணம் சூரியனின் முன் இருள் மறைவதுபோல மறைந்துவிட்டது. ஒரே சமயத்தில் அவர் பக்தராகவும் ஞானியாகவும் இருந்ததால் அவரது செயல்திறனுக்கு ஒரு வரையறையே இல்லாமல் இருந்தது.

எல்லா மனிதருள்ளும் உள்ள பிரம்மத்தை அவர் உணர்ந்திருந்ததுதான் உலகத்தையே ஆட்டிப் படைக்கக்கூடிய அவரது சக்தியின் ரகசியம். அதே சக்திதான் உறங்கும் மனிதர்களை விழித்தெழச் செய்யவும் இருள் நிறைந்த மனங்களில் ஒளியேற்றவும் இன்றும் வேலை செய்து கொண்டிருக்கிறது.

சுவாமிஜியின் வாழ்க்கையை நாம் கூர்ந்து கவனித்தால் கர்மம் (செயல்) என்பது ஞானத்திற்கும் பக்திக்கும் எதிர்மறையானது என்ற தவறான கருத்து விலகிப்போய் விடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s