பிறருக்கு ஏன் நன்மை செய்ய வேண்டும்?

பிறருக்கு ஏன் நன்மை செய்ய வேண்டும்?

ஒருமுறை லாட்டு மகராஜை (சுவாமி அத்புதானந்தர்) பார்க்க இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் வந்தார்கள். அவர்கள் சுவாமிகளிடம் ராமகிருஷ்ண இயக்கத்தைப் பற்றியும், அது மேற்கொண்டுள்ள மக்கள் நலப் பணியைக் குறித்தும் பேசினார்கள். சந்திர சேகர் சட்டர்ஜி என்பவர் அவர்களுக்கிடையே மொழிபெயர்ப்பாளராக இருந்து உதவினார்.

———-

லாட்டு மகராஜ்: “மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கிறீர்கள், சரிதான். அதற்கான காரணத்தை என்னிடம் சொல்ல முடியுமா?”

இரண்டாவது பெண்: ” அதனால் மக்களுக்கு நன்மை உண்டாகிறது.”

லாட்டு மகராஜ்: “அதனால் செய்பவனுக்கு என்ன லாபம் ஏற்படும் என்பதை உங்களால் சொல்ல முடியுமா? நான் ஏன் பிறருடைய நன்மைக்காக உழைக்க வேண்டும்?”

முதல் பெண்: “நாம் இந்தச் சமுதாயத்தில் வாழ்கிறோம். சக மனிதர்களுக்கு உதவுவது நமது கடமை. அந்தக் கடமையை நிறைவேற்றுவதுதான் எங்கள் மதமும்கூட. துன்பத்தைக் களைவதே எங்கள் லட்சியம்.”

லாட்டு மகராஜ்: “நீங்கள் சொன்ன லட்சியத்தைவிட உயர்வான லட்சியம் ஒன்று உள்ளது. அதுதான் கடவுளை அடைவது. அதற்காகப் போராடுபவர்கள்தான் உண்மை வீரர்கள். பிறருக்கு சேவை செய்வது என்பது வெறும் சமுதாய நடவடிக்கை மட்டும்தான். இதை மட்டும் வைத்துக் கொண்டு கடவுளை அடைய முடியாது. மக்கள் நலப் பணிகளால் பிறருக்கு வேண்டுமானால் நன்மை ஏற்படலாம். ஆனால் உங்களுக்கு அதனால் என்ன நன்மை? பிறருக்கு வேலை செய்வதால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதை எனக்குத் தெளிவாகச் சொல்லுங்கள் பார்க்கலாம்.”

லாட்டு மகராஜின் பேச்சைக் கேட்ட அந்தப் பெண்கள் குழம்பிப் போனார்கள். லாட்டு மகராஜ் தொடர்ந்து பேசினார்: “உங்கள் விவாதத்தில் பெரிய ஓட்டை உள்ளது. எல்லா விவாதங்களுமே குறைபாடுகள் கொண்டவை தான். இறைவன் இருக்கிறான் என்பதை ஒத்துக்கொண்டால் தான் எல்லாம் அர்த்தமுடையதாகும். அவரை நமது வாழ்க்கைக்குள் கொண்டு வந்தால் ஏற்றத் தாழ்வுகள் குறைந்து, அனைவரும் நம்முடையவர்கள் என்ற எண்ணம் நமக்கு ஏற்படும். உடல் எனும் நிலையில் எனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது.

ஆனால் ஆன்ம நிலையில் அனைவரும் அந்த சச்சிதானந்தப் பரம்பொருள்தான். இந்த நிலையில், யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாது. இறைவனே இறைவனுக்கு உதவிக் கொள்கிறார், அவ்வளவுதான். மக்கள் நலப் பணிகளைச் செய்ய இது மட்டுமே சரியான காரணமாக அமைய முடியும். பிறருக்கு நன்மை செய்வதால் நாம் நமக்கும் மற்றவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டைக் களைய முயற்சிக்கிறோம். பிறருடைய நன்மை எனது நன்மையில் அடங்கியுள்ளது என்பதே சரியான கண்ணோட்டமாக இருக்க முடியும்.

தனது நன்மையை விரும்பாத யாராவது உண்டா? இறைவனை நம்பி, அதற்குப் பிறகு மக்களுக்குச் சேவை செய்தால் ஒருபோதும் மனத் தளர்ச்சி உண்டாகாது. மக்களுக்கு நன்மை செய்வதால் சமுதாயத்தில் வேண்டுமானால் அந்தஸ்து கிடைக்கலாம். ஆனால் அகங்காரத்துடன் ஒருவர் வேலை செய்யும்போது அதன்மூலம் எந்தவிதமான ஆன்மீக நன்மையும் கிடைக்காது. நல்லகாரியங்கள் கூட அகங்காரத்துடன் செய்யப்படும்போது மிகப் பெரிய பந்தமாகிவிடுகின்றன. அதே சமயம் சுய நலமில்லாமல் பிறருக்கு நன்மை செய்யும்போது பந்தம் விலகி முக்தி வாய்க்கிறது.

Source: கடவுளுடன் வாழ்ந்தவர்கள் (Part 1) – page 476
சுவாமி அத்புதானந்தர் ஜயந்தி (22-02-2016)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s