ஸ்ரீராமகிருஷ்ணரிடம் பிரார்த்திப்போம்

ஸ்ரீராமகிருஷ்ணரிடம் பிரார்த்திப்போம்

GD1

1. எல்லா நலன்களையும் அருளும் எந்தையாகிய ஸ்ரீராமகிருஷ்ணர் நிலையற்ற உலக போகங்களையும் தந்தருள்வார்; நிலையான வீடுபேறு நிலையையும் அருள்வார்.
சொல்லாலும் மனதாலும் செயலாலும் அவரைத் துதித்துத் தொண்டு செய்தால் துயரமும் இல்லை, கவலையுமில்லை. எல்லாம் இன்பம், என்றுமே இன்பம்.

2.வேடமும் குறிகளுமின்றி வேடிக்கையாகத் தம்மை நாடியவருக்கெல்லாம் ஞானம் அளித்தவர் குருதேவர். ஈடில்லா ஞானமூர்த்தியின் துணை என்றும் நமக்குண்டு.

3. உருவம் படைத்த கடவுளாகவும் உருவம், குணங் களற்ற பரம்பொருளாகவும் விளங்கும் ‘ஓம்’ என்பதன் மகிமை பொருந்திய வடிவே ஸ்ரீராமகிருஷ்ணர்.
இத்தகைய பெருமானின் பெருமைகளைப் பேசி, அவருடைய பொன் போன்ற திருவடிகளைச் சிந்திப்ப வர்கள் பிறவி என்னும் சகதியைத் தாண்டிச் சாகாத இறை நிலையைப் பெறுவார்கள்.

4. எல்லாத் துன்பங்களுக்கும் அடிப்படைக் காரணமான காமத்தையும் கோபத்தையும் அறவே விட்டொழித்தவர், கருணைமயமானவர், தெளிவான சிந்தை உடையவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.
இத்தகைய தூயவரின் தூய்மையான மலர் போன்ற முகத்தில் தவழும் புன்முறுவலைத் தொடர்ந்து தியானித்து வந்தால் பரமனை அடையும் பரமானந்தப் பேற்றினை உள்ளங்கை நெல்லிக்கனி போல் பெறலாம்.

5. காமம் என்னும் தீய விலங்கு சூழும் கரிய இருளா கிய உலகக் காட்டிலிருந்து மீள, மகானாகிய குருவின் சொல்லைத் தீபமாய் ஏந்தி, அவர் காட்டும் வழியில், அவரை வணங்கி விரைந்து சென்றால், தெய்வத்தின் பிரம்மலோகத்தைச் சேர்ந்து பிறவியற்ற நிலை எய்திப் பேரானந்தத்தில் திளைப்போம்.

6. கருணைக்கடலான குருதேவர் இரங்கி அருள் புரிந்தால் உலகையே ஆளும் சக்தி பெறலாம். அக்கருணைத் தெய் வம் இரங்கி அருள் புரிய வேண்டு மெனில் நம் உடற்பற்று, பொருள் பற்று எல்லாவற்றையும் தடை யின்றி அவரது திருப்பாதங்களில் அர்ப்பணிக்க வேண்டும். அவரது திருவடி போற்றி வணங்கினால், அவர் துன்பமற்ற பேரின்பத்தை அருளி நம் குடி முழுவதையும் ஆட்கொண்டு அருள்புரிவார்.

7. பாடகன் ஒருவன் தனது குழுவுடன் ஊரினுள் புகுந்து பல பாடல்கள் பாடிச் செல்வது போல் உலக மக்களை உய்விக்கும் பொருட்டு வங்க நாட்டிலுள்ள காமார்புகூருக்குச் சீடர்கள் பலருடன் வந்த பகவானின் திருவடி தொழுவோம்.

8. எண்ணற்ற மனித ஆன்மாக்களைப் பிறவிக்கடல் கடக்கச் செய்து பேரின்பக்கரையில் சேர்த்த சீரிய குரு ஸ்ரீராமகிருஷ்ணரின் பதம் போற்றித் தீராத பாதகம் செய்த சிறியோர்களும் உயர்ந்தோம்.

9. எனது உயிரான ஈசனே! உன் அருள் நிறைந்த கண் களால் என்னை ஊன்றிப் பார்த்தபோது என் செயல் களில் என்னைக் காணவில்லை. மாறாக இறைவா! இந்த உலகமும் உயிரும் நீயே அன்றி மற்றொன்று அல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.

10.நெஞ்சமே! வேண்டியதெல்லாம் பெற்று மேன் மையாய் வாழ்ந்திட இறைவன் ஸ்ரீராமகிருஷ்ணர் அருள்வழி கண்ட பின்னும், தூண்டிலில் அகப்பட்ட மீனைப் போல் ஏன் துடிக்கிறாய்? எப்போதும் உள்ள இன்பத்தை உன் உள்ளத்தில் கண்டு இன்புறு.

11.நெஞ்சே! உலகில் இறைவனின் கருவியாக இருந் திடு. இறைவன் துணையாய் நிற்பான். இதில் சந்தேகம் வேண்டாம். இறைவனின் துணையே என்றும் நிலையா னது. இறைவனின் பாதங்களை நீ மறந்துவிட்டால் அது உனக்கு இழிவைத் தரும்.

12. நெஞ்சே! மரங்களில் கூடு கட்டி வாழ்ந்திடும் பறவைகளுக்கும் கருணை காட்டி உணவை ஊட்டும் இறை வன் தந்த சற்குருவின் பாதங் களை, கர்வத்தை ஒழித்து,
குரங்கெனப் பிடித்துக் கொள். கூசிடாதே!

13. நான் என்ன புண்ணியம் செய்தேன்!
ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அடிமையாகி அவரருளால் ஆன்மபோதம் பெற்றேன். அவரது பெருங் கருணையால் இந்த இழிந்த பிறப்பு இறப்புச் சுழலில் இருந்து விடுபட்டேன்.
உலக மக்களே! அவர் புகழ் பாடுங்கள்!

– சுவாமி மதுரானந்தர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s