பலஹாரிணி காளி பூஜை

பலஹாரிணி காளி பூஜை

சக்தி வழிபாட்டிற்கு பேர் பெற்றது வங்கம். அங்கே காளி, துர்க்கை ஆகிய தேவிகளுக்குப் பெரிய ஆலயங்களும் திருவிழாக்களும் உண்டு. வங்க நாட்டில் நவராத்திரியில் துர்க்கா பூஜையைத் தேசீய விழாவாகக் கொண்டாடுவதை இன்றும் நாம் காணலாம்.

இறைவனைப் பல உறவுமுறைகளில் உபாசிக்கலாம்; வழிபடலாம்.ஆயினும் தாயாக, உலக அன்னையாகக் கருதி வழிபடுவது மிகவும் எளியதும் இனியதுமான சாதனை. தனயனின் குறைகளைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தயையுடன் அணைப்பவளன்றோ தாய்? அதுபோலவே, உயிர்களின் குறைகளைப் பொருட்படுத்தாமல் அருள் புரிபவள் உலக அன்னை – ஜகதம்பிகை. அம்பா, அம்பிகா என்ற பதங்கள் அம்மா என்பதாம். ஸ்ரீலலிதா ஸஹஸ்ர் நாமத்தில் முதல்முதலாக வருவதே ‘அம்மா’ தான்! ஸ்ரீமாத்ரே நம்:’ என்பது மந்திரம்.

நாம் பார்க்கும் அனைத்தின் வடிவமாகவும், அனைத்தையும் ஆள்கிறவளாகவும் சக்தியனைத்தும் பொருந்தியவளாகவும் விளங்குகிறாள் ஜகதம்பிகை.பிறப்பு-இறப்பு ஆகிய சம்சாரக் கடலிலிருந்து கரையேற்றும் படகாக அமைபவளாகையால் பவதாரிணி எனவும் போற்றப்பெறுகிறாள்.
Phalaharini
பலஹாரிணி காளி பூஜை

பலம் என்றால் பழம், கனி; ஹாரிணி – போக்குகிறவள், அறுப்பவள், எடுத்துக்கொள்பவள்.
பழம் என்பது பயன்; நாம் செய்யும் வினைகளின் பலனை இறைவிக்கு அர்ப்பணம் செய்தல் என்பதே இந்தப் பூஜையின் உட்கருத்து. வினைப் பயங்கள் உருவகமாக, கனிகளைக் கொண்டு காட்டப்படுகின்றன. கருமங்கள் அனைத்தும் பலனைக் கொடுப்பவை. அவை பாவ புண்ணியங்களாக இருக்கலாம். இரு வினைகளும் உயிர்க்குப் பந்தங்களே, அவையே பிறப்பு இறப்புக்குக் காரணமாவன். சம்சாரத்தளைக்கு வினைப்பயனன்றோ காரணம்? எல்லா வினைப்பயன்களையும் இறைவியின் திருவடியில் அர்ப்பணம் செய்துவிடுதலே விடுதலைக்கு வழி. எல்லாச் சாஸ்திரங்களும் – எல்லாச் சமய சித்தாந்தங்களும் – இதை வற்புறுத்துகின்றன.

ஒருவர் செய்யும் ஜபம், தவம், பூஜை ஆத்ம சாதனம் ஆகியவற்றின் பலங்கள் இறைவனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டியவையாம். எல்லாப் பலங்களையும் அர்ப்பணம் செய்தல், எல்லாத் தளைகளினின்றும் விடுதலை பெறுதல் என்பதே பலஹாரிணி காளிபூஜையின் கருத்து.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s