அரசனும் தாயுமானவரும்

அரசனும் முனியும்

திருச்சிராப்பள்ளியில் அரசு புரிந்த விஜயரங்க சொக்கலிங்கமென்னும் அரசன், தாயுமானவருக்கு, காஷ்மீரத்திலிருந்து வரவழைத்த விலையுயர்ந்த ஒரு சால்வையைப் பரிசளித்தான். தாயுமானவர் அதைப்பெற்று அரசனை ஆசீர்வதித்தார்.

ஒரு நாள் அவர் வீதி வழியே செல்லுகையில் பரஸ்திரீ ஒருத்தி கந்தைத் துணிகளைத் தரித்துக் கொண்டு குளிரினால் நடுங்கப்பெற்று வருந்தினாள். கண்ணுற்றதும் தாயுமானவர் மனம் அனலின்கண் மெழுகேபோல் உருகிற்று. தன்னிடமிருந்த சால்வையை அம்மாதுக்களிக்க, அப்பரத்தை அதை வாங்கிக் கொள்ள சிறிது அச்சமுற்றாள். ஆனால் தாயுமானவர் மிகவும் வணக்கமாய்ச் சால்வையைப் பெற்றுக் கொள்ளுமாறு வேண்ட, அவளும் அதை வாங்கிக் கொண்டாள்.

இச்செய்தி அரசனுக்குத் தெரியவந்தது. மன்னன் கோபாக்கினியால் எரிக்கப்பட்டு “அளவற்ற விலை பெற்ற சால்வை யான் அளிக்க, அதைச் சிறிதும் அஞ்சாது தெருவின் கண் நின்ற ஒரு இழிய பரஸ்திரீக்குக் கொடுத்து என்னை மானபங்கம் செய்த காரணம் பற்றி தாயுமானவரை, கால்களையும், கரங்களையும் இறுகக்கட்டி என் முன் கொண்டு வருக” என ஆஞ்ஞாபித்தன்.

தாயுமானவர் தாம் எவ்வளவு மனக்களிப்புடன் சால்வையைக் கொடுத்தனரோ அவ்வளவு மகிழ்ச்சியுடன் அரசன் சமுகத்திற்கு வந்து நின்றார். உடனே மன்னன் கேட்டதாவது “உனக்குப் பரிசுகொடுத்த சால்வை எங்கே இப்பொழுது காணோமே” என்றான்.

thaumanavar
தாயுமானவர் “நான் இவ்வண்டத்திற்கு மாதாவாகிய அகிலாண்டேஸ்வரிக்குச் சம்ர்ப்பித்தேன். அவளும் அதற்காகத் தங்களுக்கு க்ஷேமமே உண்டாகும்படி அநுக்கிரகித்தாள்.” என்றார். அரசன் உடனே தலை குனிந்து மானமடைந்து எதிரில் நின்ற முனியின் காலில் வீழ்ந்து மன்னிக்கும்படி கேட்டுக் கொண்டான்.

ஆதலால் யோகிகளுக்குக் கண்டனவெல்லாம் தெய்வமே. செய்யும் செய்கைகளெல்லாவற்றிலும் கடவுளையே காண்பார்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s