Gurudevar

ஸ்ரீராமகிருஷ்ணர்ஏன்அவதரித்தார்?

Gurudevar


ஸ்ரீராமகிருஷ்ணர் ஏன் அவதரித்தார்?
கால வெள்ளத்தில்..., ஆரியரின் பரம்பரையினர் உண்மை லட்சியத்திலிருந்து வீழ்ந்தனர்; துறவு மனதை இழந்தனர்; கண்மூடித்தனமான பழக்கங்களில் தோய்ந்து அறிவிழந்தனர்; வீழ்ச்சியுற்றனர்;

ஆன்மிக லட்சியத்தின் ஒவ்வோர் அம்சத்தை வலியுறுத்தும்போதும், ஒன்றுக்கொன்று முரணானவை போல் தோன்றும் புராணங்கள் போதிக்கின்ற வேதாந்த உண்மைகளை உணரும் ஆற்றலற்றுப் போனார்கள் அந்த ஆரியப் பரம்பரையினர்.

இதனால் என்ன நடந்தது? சமய நாடாகிய இந்தியா குழப்பக்குட்டை ஆயிற்று. நிலையான வேதமதமாகிய சனாதன தர்மம் சிதறியது.
ஆன்மிக லட்சியத்தின் பல்வேறு அம்சங்களையும் ஒருங்கிணைத்து வந்த சனாதன மதம் பிளவுபட்டுப் பல மதங்களாகக் காட்சி அளித்தது.
இவை ஒன்றுக்கொன்று முரண்பட்டு, பகை, பொறாமை, சகிப்பின்மை, குறுகிய இனவெறி ஆகிய நெருப்பிற்கு இரையாகி அழிவதற்கு ஒன்றையொன்று முந்தின; உந்தின. பாரத நாட்டை அவை நரகமாக்கிவிட்டது போல் தோன்றியது.

இந்தியா இந்த நிலையில் இருந்தபோதுதான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதரித்தார். ஆரியர்களின் உண்மைச் சமயம் எது என்பதைக் காட்டினார்.
இந்துமதம் பல்வேறு கிளைகளுடனும் விழுதுகளுடனும் படர்ந்து நாடு முழுவதும் விரிந்திருந்தாலும் அதன் உண்மையான ஒருமை எங்குள்ளது என்பதைச் சுட்டிக் காட்டினார்.

எண்ணற்ற சமயப் பிரிவுகளாலும், வெளிப்பார்வைக்கு முரண்பட்டவை போல் தோன்றிய பல்வேறு பழக்க வழக்கங்களாலும் பிரிந்து நின்று, பூசலிட்டு, மக்களுக்குத் தவறான பாதையைக் காட்டி, பிற நாட்டினரின் நகைப்புக்கு மதம் இடமளித்து வந்த போது, உண்மை மதம் எது என்பதைக் காட்ட, குருதேவர் சனாதன தர்மத்தின் உருவமாக அவதரித்தார்……

….எனவே மகோன்னதமான இந்தப் புதிய யுகத்தின் உதய காலத்திலேயே மதப் பிரிவுகளிடையே ஒற்றுமை பிரகடனம் செய்யப்படுகிறது. மேன்மையான இந்தக் கருத்து நமது புனித நூல்களில் ஏற்கனவே உள்ளது, ஆனால் மறைந்துள்ளது. இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டு மனிதகுலத்துக்கு சங்கநாதம் என்று முழங்கப்படுகிறது.
இந்தப் புதிய நன்கொடை பொதுவாக உலகம் முழுவதற்கும், சிறப்பாக இந்தியாவிற்கும் நலன் தரவல்லது. இதனை உணர்த்தியவர் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர்.

கடந்த காலங்களில் மதத்தில் புதிய சகாப்தத்தைத் தோற்றுவித்த மகான்களின் ஒரு சீரிய நிறைவாகத் தோன்றிய அவதார புருஷர் ஸ்ரீராமகிருஷ்ணர்.
ஓ மனிதா, இதை நம்பு. உன் உள்ளத்தில் இதை ஊன்றச் செய்.
-குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் 2.8-11.

ஸ்ரீராமகிருஷ்ணர் பிறந்த நாள் முதலே சத்தியயுகம் பிறந்துவிட்டது. இனி எல்லாவித வேறுபாடுகளும் மறையும். சண்டாளர்வரை அனைவரும் அன்பில் பங்கு கொள்வார்கள். ஆண்-பெண், பணக்காரன் – ஏழை, பண்டிதன்-பாமரன், பிராமணன் – சண்டாளன் போன்ற வேறுபாடுகள் யாவற்றையும் அவர் விரட்டிவிட்டார்.

ஸ்ரீராமகிருஷ்ணர் சண்டைச் சச்சரவுகளை முறியடிப்பவர், இந்து-முஸ்லீம், கிறிஸ்தவர் – இந்து முதலிய எல்லாம் ஓடிப் போய்விட்டன. வேற்றுமை காரணமாக ஏற்பட்ட சச்சரவுகளெல்லாம் வேறு யுகத்தைச் சேர்ந்தவையாகிவிட்டன.

இன்றைய சத்திய யுகத்தில் அவரது அன்புவெள்ளம் அனைத்தையும் ஒன்றாக்கிவிட்டது.
ஸ்ரீராமகிருஷ்ணரை வழிபடுபவர்கள் நீசர்களாக இருந்தாலும் கணத்தில் பெரிய மகான்கள் ஆகிவிடுவர், பெண்களானாலும் சரி, ஆண்களானாலும் சரி….
ஸ்ரீராமகிருஷ்ணர் பெண்களின் ரட்சகர், பாமரர்களின் ரட்சகர், உயர்ந்தோர் தாழ்ந்தோர் அனைவரின் ரட்சகர். -எழுமின்.விழிமின். தொகுதி 10.பக்கம் 233.

One response to “Gurudevar

  1. THIS MESSAGE IS VERY IMPORTANT TO ALL THE PEOPLE IN THE WORLD. LET US PRAY OUR GURUDEVAR FOR OUR SELF REALISATION.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s