Swamiji

குருதேவரின்கொடியின்கீழ்….

Swamiji


ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்களைப் பரப்புகின்ற பணிக்கு உன் உடல், உள்ளம் அனைத்தையும் அர்ப்பணம் செய். ஏனெனில் செயல் அல்லது கர்மம்தான் முதல் நிலை.
விடாமுயற்சியுடன் சம்ஸ்கிருதம் படி. அதனுடன் பக்தியும் வேண்டும். ஏனெனில் நீ மனித குலத்திற்கு ஆசிரியராக இருக்கப் போகிறாய்.

இது பற்றி என் குருமகராஜ், ‘தற்கொலைக்கு ஒரு சிறிய கத்தி போதும், ஆனால் பிறரைக் கொல்ல துப்பாக்கிகளும் வாட்களும் வேண்டும்’ என்பார்.
உரிய காலம் வரும்போது, நீ எப்போது உலக வாழ்க்கையைத் துறந்து இறைவனின் திருநாமத்தைப் பிரச்சாரம் செய்யலாம் என்பதற்கான அதிகாரம் உனக்கு வந்து சேரும்.
உனது தீர்மானம் புனிதமானது, சிறந்தது. இதில் இறைவன் உனக்கு அருளட்டும். ஆனால் அவசரப்பட்டு எதிலும் இறங்காதே. கர்மம், பக்தி இவற்றின் மூலம் முதலில் உன்னைப் புனிதமாக்கிக் கொள்.

இந்தியாவும் சனாதன தர்மமும் நெடுங்காலமாகத் துயரப்பட்டு வந்துள்ளன. ஆனால் கடவுள் கருணைக்கடல். மீண்டும் ஒருமுறை அவர் தம் குழந்தைகளைக் கைதூக்கிவிட வந்துள்ளார், வீழ்ந்து கிடக்கிற இந்தியா எழுந்து நிற்க மீண்டும் ஒருமுறை வாய்ப்புத் தரப்பட்டுள்ளது.

ஸ்ரீராமகிருஷ்ணரின் திருவடிகளில் அமர்வதன் மூலமே இந்தியா முன்னேற முடியும். அவரது வாழ்வையும் உபதேசங்களையும் எங்கும் பரப்ப வேண்டும்; இந்து சமுதாயத்தின் ஒவ்வொரு மயிர்க்காலினூடேயும் அவற்றை ஊடுருவச் செய்ய வேண்டும்.

இதை யார் செய்வார்? ஸ்ரீராமகிருஷ்ணரின் கொடியைக் கையிலேந்தி, உலகின் நற்கதிக்காக அணிவகுத்துச் செல்வது யார்? பெயர், புகழ், செல்வம், போகம் இவை மட்டு
மன்றி, இந்த உலகிலும் மறுஉலகிலும்கூடப் பெறக்கூடிய எல்லா சுக போகங்களையும் துறந்து, சீரழிவு என்ற இந்த வெள்ளப்பெருக்கைத் தடுத்து நிறுத்த வருபவர் யார்?

ஒரு சில இளைஞர்கள் போர்முனையில் குதித்துள்ளனர்; தங்களைத் தியாகம் செய்து கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஒரு சிலரே. அவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கானோர் நமக்குத் தேவை. அவர்கள் நிச்சயமாக வந்து சேர்வார்கள்.
அதில் ஒருவராக இருப்பதற்கான மனதை எம்பெருமான் உனக்கு அளித்துள்ளது கண்டு மகிழ்கிறேன். அவர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவன் பெருமை பெறுகிறான். உன் தீர்மானம் நல்லது, உன் நம்பிக்கை மேலானது; இருளில் அழுந்திக் கிடக்கிற கோடிக்கணக்கானோரிடம் இறைஒளியைச் சேர்ப்பதாகிய உன் லட்சியம் உலகிலேயே உயர்ந்தது.

ஆனால் என் மகனே, தடைகள் இதோ: எதையும் அவசரப்பட்டுச் செய்துவிடக் கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவையே வெற்றிக்கு இன்றியமையாத மூன்று. இவை அனைத்திற்கும் மேலாக வேண்டுவது அன்பு.

எல்லையற்ற காலம் உன் முன் உள்ளது, தேவையற்ற அவசரம் வேண்டாம். தூய்மையும், நேர்மையும் உன்னிடம் இருக்குமானால் எல்லாம் சரியாக அமையும். உன்னைப் போன்ற நூற்றுக்கணக்கானோர் நமக்குத் தேவை. அவர்கள் சமூகத்தின்மீது பாய்ந்து அதை அதிரச் செய்ய வேண்டும்; எங்கு பார்த்தாலும் புது வாழ்வையும் பேராற்றலையும் வழங்க வேண்டும். இறைவன் உனக்கு அருள்வாராக!

சுவாமி விவேகானந்தர், டாக்டர் நஞ்சுண்டராவ் அவர்களுக்கு அமெரிக்காவிலிருந்து 30 நவம்பர் 1894 அன்று எழுதிய கடிதத்திலிருந்து.

One response to “Swamiji

  1. LET US JOIN/ (TO SUBSCRIBE SRI RAMAKRISHNA VIJAYAM TO OUR FRIENDS ) IN THIS SPIRITUAL ORGANISATION TO SERVE THE PEOPLE THROUGH BRINGING ALL OUR FRIENDS/RELATIVES TO THIS DIVINE ORGANISATION AND WE PRAY ” THIRU MOOVAR’S FEET”. TO ACHIEVE THE GOAL.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s